‘பீஸ்ட்’ திரை விமர்சனம்

 ‘பீஸ்ட்’ திரை விமர்சனம்

இந்தியாவின் ரா அமைப்பின் உளவுப் பிரிவில் பணியாற்றுக்கிறார் விஜய். அவருக்குத் தீவிரவாதியின் தலைவனைப் பிடிக்க அசைன் மெண்ட் கொடுக்கப்படுகிறது. ஆனால் அந்த நேரத்தில் தேர்தல் வர இருப்பதால் வேலையை பாதியில் நிறுத்த சொல்கிறார்கள். இது விஜய் யைக் கோபப்படுத்துகிறது.

தீவிரவாதி தலைவனை பிடிக்கப்போன இடத்தில் மொத்த தீவிரவாத கும்பலையும் அழித்துவிட்டு வருகிறார் விஜய். அப்போது தற்செயலாக ஒரு குழந்தை இறந்துவிடுகிறது. இதன் பிறகு சென்னைக்கு வரும் விஜய் அமைதியாக இருக்கிறார். அங்கு பூஜாவைச் சந்தித்து காதலிக்கிறார்.

அப்போது தமிழ்நாட்டில் தீவிரவாத கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தப் போகும் தகவல் மத்திய அரசுக்குக் கிடைக்கிறது. இந்த நேரத்தில் சென்னையில் இருக்கும் மாலுக்குத் தனது காதலியுடன் செல்கிறார் விஜய். அங்கு செக்யூரிடி, வைபை, எக்ஸ்லேட்டர் என்று எதுவும் வேலை செய்யாமல் இருப்பதை வைத்து சந்தேகம் கொள்கிறார் விஜய். அப்போதுதான் அந்த மால் ஹைஜாக் செய்யப்பட்டிருப்பது தெரி கிறது. இந்த மாலிலிருந்து பொதுமக்களை எப்படி விஜய் காப்பாற்று கிறார் என்பதை ஆக்‌ஷன் விருதாக சொல்லியிருக்கிறார் நெல்சன்.

விஜய் தனக்கேயுரிய ஸ்டைலில் சண்டைக் காட்சிகளில் ஜொலிக்கிறார். குழந்தை அழும் சத்தம் கேட்டவுடன் சண்டைக்கு தயாராவது செண்டிமெண்ட் அட்டாக். எதிரியை சுட்டுத்தள்ளும்போது சிரிக்கும் சிரிப்பு ரசிகர்களிடையே கைதட்டல் பெருகிறது.

செக்யூரிட்டி ஏஜென்ஸி வைத்திருக்கும் வி.டி.வி. கணேஷ் படத்திற்கு நல்ல பொழுதுபோக்கு. கூடவே கிங்ஸ்லி, யோகிபாபு ஆகியோர் சேர்ந்து கொண்டு கலகலக்க வைக்கிறார்கள்.

செல்வராகவன் வரும் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. விஜய்க்கு அரசியல் பேச வேண்டும் என்று ஆசை. ஆனால் அதை நேரடியாகப் பேசினால் எதிர்ப்பு வரும் என்று நினைத்து சினிமா காட்சிகள் மூலம் பேசியிருக்கிறார் விஜய் சில இடங்களில் வசனம் மூலம் சிரிக்க வைத்திருக்கிறார். உளவுப் பிரிவு அதிகாரி என்பதற்காக தீவிரவாதிகளைக் கொல்ல அவர் செய்யும் யோசனை கைதட்டல் ரகம்.

பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக வந்து படம் முழுவதும் அவர் பக்கத்தில் நிற்கிறார். தேர்தல் சூழல் வந்தவுடன் ராணுவத்தின் மூலம் பரிதாபத்தைத் தேடும் அரசியல் கட்சியைத் துணிச்சலுடன் எதிர்த்திருக் கிறார் விஜய்.

மலப்பித்தா பித்தாபு பாடலில் ரசிகர்களிடன் கூச்சல் அதிகம். முதல் தீவிரவாதியை கொல்ல விஜய் நடந்து வரும்போது விசில் பறக்கிறது. குழந்தைக்கும் விஜய்யை இந்தப் படத்தில் பிடித்துப் போகும்.

மனோஜ் ப்ரமஹம்சாவின் ஒளிப்பதிவும், அனிருத்தின் இசையும் படத்திற்குப் பலம் அன்பறிவு சண்டைக் காட்சிகள் விஜய் ரசிகளுக்கு விருந்து.

இருந்தாலும் கதையில் கவனம் செலுத்தியிருக்கவேண்டும். பெரிய ஹீரோ படம் என்றாலே டைரக்டர்கள் கோட்டை விட்டுவிடுகிறார்கள்.

ஒருமுறை பார்க்கலாம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...