பீஸ்ட் ரிலீஸ் அப்டேட்
நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ம் இன்று வெளியாகிறது. நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’டை கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியிருப்பது படத்துக்கு எக்ஸ்ட்ரா மைலே ஜாக அமைந்துள்ளது. அனிருத் இசை இப்படத்தில் தூள் கிளப்பியுள்ளது. விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தை யும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. படத்தின் அப்டேட் கேட்டு தொடர்ந்து ட்வீட் செய்து வந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் வெளியானது. அரபிக் குத்து எனும் அந்தப் பாடலை நடிகர் சிவ கார்த்திகேயன் எழுதியிருந்தார். பாடலை அனிருத்தும், ஜோனிடா காந்தியும் இணைந்து பாடியிருந்தனர். அரபிக்குத்து 200 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை யூடியூபில் பெற்றுள்ளது. இதுவொரு சாதனை.
இதைத் தொடர்ந்து விஜய் பாடிய ஜாலியோ ஜிம்கானா என்ற பாடல் வெளியிடப் பட்டது. தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடலைப் பாடுவதை வழக்கமாக வைத்திருக்கும் விஜய்யின், இந்தப் பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதுவும் யூடியூப் பார்வையில் சாதனை படைத்தது.
வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து படத்தின் முன்பதிவு தொடங்கியது. முதல் நாளிலேயே பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
அமெரிக்காவில் பீஸ்ட் திரைப்படம் முன்பதிவில் மட்டும் ரூ. 1.9 கோடி வரை வசூல் செய்திருக்கிறதாம்.
பீஸ்டின் வெளிநாடு திரையரங்கு விநியோக உரிமை சுமார் 38 கோடிகளுக்கு விலை போயுள்ளது. விஜய் படங்களில் இதுவே அதிகபட்சமாகும். ரஜினி, ஷங்கர் போன்ற இயக்குநருடன் சேரும்போது மட்டுமே இந்த விற்பனையை அவரது படம் தாண்டிச் செல்லும். பீஸ்டின் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உரிமைகளும் இது போன்று சாதனை விலைக்கு வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.