டாணாக்காரன் -திரை விமர்சனம்
1997ஆம் ஆண்டு போலீஸ் டிரெயினிங்கின்போது நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் டாணாக் காரன்.
வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்த தமிழ் தான் டாணாக்காரன் படத்தை எழுதி, இயக்கி உள்ளார். அதனால் அவரின் பாதிப்பு சற்று இருக் கும். Potential Studios தயாரித்துள்ள இந்த படம் நேரடியாக ஓ.டி.டி.யில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தன் காவல்துறை அனுபவங்களை வைத்துஅங்கு நடக்கும் அழுக்குகளைத் துணிந்து திரைக்கதை யாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தமிழ்.
90களின் இறுதியில் காவல்துறை பயிற்சிக்குச் செல்லும் இளைஞர்களுடன் 80களில் இருந்து ஒரு குழுவும் பயிற்சிக்கு வருகிறது. வெவ்வேறு ஸ்குவாட்களாகப் பயிற்சிக்கு வந்தவர்கள் பிரிக் கப்பட, (கதாநாயகன் விக்ரம்பிரபு) அறிவு இருக் கும் ஸ்குவாட் எப்போதும் கடுமையாக நடந்து கொள்ளும் காவல்துறை அதிகாரி ஈஸ்வரமூர்த்தி யின் கீழ் வருகிறது. மிகவும் கண்டிப்பான அவ ருக்கு தன் குழுவில் இருக்கும் வயதானவர்களை யும் பிடிக்கவில்லை, அவர்களுக்கு ஆதரவாக அறத்தின் பக்கம் நிற்கும் அறிவையும் பிடிக்க வில்லை. சின்னச் சின்ன பிரச்னைகளும் ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன. மரணங்கள் சம்பவிக் கின்றன. வருங்கால காவல்துறை அதிகாரிகள் எப்படி இவர்களிடம் தப்பிப் பிழைக்கிறார்கள் என்பதாக நீள்கிறது ‘டாணாக்காரன்’.
போலீஸ் பயிற்சி மையத்தில் என்னவெல்லாம் நடக்கிறது, எப்படி எல்லாம் கடுமையான பயிற்சி கள் கொடுக்கப்படுகிறது என்பதை அக்குவேறு ஆணி வேராக எடுத்துச் சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குநர் தமிழ். வேலூர் வெயிலையும் படத்தில் மிகக் கச்சிதமாகப் பயன்படுத்தி இருக் கிறார்கள். போலீஸ் தொடர்பான சின்ன விஷ யங்களைக்கூட மிக அழகாக, தெளிவாகத் தொட் டுச் சென்றுள்ளார் டைரக்டர் தமிழ்.
அறிவாக விக்ரம் பிரபு. எழும் கோபத்தை அடக் கிக்கொண்டு திமிறி எழாமல் அமைதியாகக் காரியத்தை முடிக்க வேண்டிய கதாபாத்திரம். ‘கும்கி’ படத்துக்குப் பின்னர் விக்ரம் பிரபுவுக்கு நல்லதொரு வேடம். அதை இன்னும கொஞ்சம் சிறப்பாகச் செய்திருக்கலாம். இயக்குநர் தமிழ் விக்ரம்பிரவுவிடம் வேலை வாங்கியிருக்கலாம். முகபாவனை குறைவாக உள்ளது. ஈஸ்வர மூரத் தியாக லத்தியுடன் பரேடு கிளப்பும் அதிகாரி யாக மலையாள நடிகர் லால். அந்த மனிதருக்கு பெரும் தீனி போட்டிருக்கிறது டாணாக்காரன். அவர் கையிலிருந்து விழும் ஒவ்வொரு அடியிலும் காக்கியின்ஆக்ரோஷம் வெளிப்படுகிறது. காவல் நிலையங்களில் நாம் பார்த்துப் பழகிய கரை படிந்த காக்கிகளை நினைவுக்கு கொண்டு வரு கிறார் முத்து பாண்டியாக வரும் மதுசூதனராவ்.
பல சோகங்களுக்கிடையே ஏஞ்சலாக அஞ்சலி நாயர். காவல்துறை அதிகாரியாக இருந்து கொண்டு, பயிற்சிக்கு வந்திருக்கும் விக்ரம் பிரபு வைக் காதலிக்கும் அஞ்சலியின் பாத்திரத்தில் சற்று சினிமாத்தனமாக இருந்தாலும், அதை எளி தாகக் கடக்க முடிகிறது.
குறைவான காட்சிகளே வந்தாலும் நேர்மையான காவல்துறை அதிகாரியாக போஸ் வெங்கட்டும், எல்லாவற்றையும் இழந்தும் நேர்மையாக இருக் கும் எம்.எஸ்.பாஸ்கரும் பளிச்சிடுகிறார்கள்.
காவல்துறை அதிகாரிகள் ஏன் இவ்வளவு மூர்க்க மாகவும், சாமானியர்களை ஏளனமாகவும் பார்க் கிறார்கள் என்பதற்குப் பின்னிருக்கும் உளவியல் குறித்து நன்கு ஆராய்ந்து இந்தப் படைப்பினை எழுதியிருக்கிறார்.
இதற்கிடையில் இத்தனை கஷ்டங்களையும் தாண்டி போலீசாக வேண்டும் என விக்ரம் பிரபு ஏன் விடாப்பிடியாக இருக்கிறார் என்பதற்கு ஒரு குட்டி ஃபிளாஷ்பேக் காட்டப்படுகிறது. லிவிங்ஸ் டன் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் மிக அழுத்தமான நடிப்பை வெளியிப்படுத்தி உள் ளார்.
ஜிப்ரான் வழக்கம் போல் இசையில் மிரட்டி உள் ளார். இரண்டு பாடல்கள் மட்டுமே இருந்தாலும் மனதில் பதிவதாக உள்ளது. எடிட்டிங், கேமரா அனைத்தும் சிறப்பு. படம் வேகமாக நகர்கிறது. ஒரு முறை பார்க்காம்.