தலைமுடிகள் வேர் வேராக உதிர்வதை தடுக்கும் இயற்கை மருத்துவ முறைகள்!

வீட்டில் எங்கு பார்த்தாலும் முடிகள் கிடக்கின்றன. தலைவாரும் போதெல்லாம் அப்படியே வேரோடு கொத்து கொத்தாக முடிகள் உதிர்கின்றன. தலை வாருவதற்கே பயமாக இருக்கிறது என்கிற கவலை ஒவ்வொரு பதின் வயது பெண்களுக்கும் பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. இந்த பிரச்ச்னை பதின் வயதுகளில் மட்டும் அல்ல… அதன் பிறகும் நீடிக்கவே செய்கிறது. ஆனால் இப்படிக் கவலைப்படுவதால் எல்லாம் முடி உதிர்வதைத் தடுக்க முடியாது.

தலைமுடிகள் வேர் வேராக உதிர்வதை தடுக்கும் இயற்கை மருத்துவ முறைகள்!

வீட்டில் எங்கு பார்த்தாலும் முடிகள் கிடக்கின்றன. தலைவாரும் போதெல்லாம் அப்படியே வேரோடு கொத்து கொத்தாக முடிகள் உதிர்கின்றன. தலை வாருவதற்கே பயமாக இருக்கிறது என்கிற கவலை ஒவ்வொரு பதின் வயது பெண்களுக்கும் பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. இந்த பிரச்ச்னை பதின் வயதுகளில் மட்டும் அல்ல… அதன் பிறகும் நீடிக்கவே செய்கிறது. ஆனால் இப்படிக் கவலைப்படுவதால் எல்லாம் முடி உதிர்வதைத் தடுக்க முடியாது.

உங்கள் கவலைகளைப் போக்குகிற மாதிரியான ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள்… ஆண்களைப் போல் பெண்களுக்கு ஏன் வழுக்கை விழுவதில்லை… ஆண்களின் வாழ்க்கை முறை, மாத்திரைகள், சத்தான உணவுகளை உட்கொள்ளாதது, முடி பாராமரிப்பில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளாதது, பரம்பரை பிரச்சனைகள் என்று நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதனால் முடி உதிர்வது எல்லாம் பெரிய பிரச்சனையே கிடையாது. இதற்கான தீர்வு இயற்கை மருத்துவ முறைகளில் இருக்கிறது. ஆனால், இந்த மருத்துவ முறைகளை ஒரு முறை மட்டுமே செய்து விட்டு பலனை எதிர்பார்ப்பது முட்டாள் தனம். தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் உண்மையான பலனை நிச்சயமாக காணலாம்.

சத்தான ஷாம்பூ

முதலில் குக்கரில் அரிசி வேக வைப்பதைத் தவிர்த்து விட்டு, பழைய சாதம் வடிக்கும் முறைக்கு மாறுங்கள். அது தான் ஆரோக்கியமான உணவு. அதன்பின், நாம் வீண் என நினைத்து கிழே ஊற்றும் சாதம் வடித்த தண்ணீரில் ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன. இந்த சாதம் வடித்த நீருடன், சுத்தமான சீகைக்காய் தூளைக் கலந்து தலைக்குத் தேய்த்து வாரத்திற்கு இரண்டு முறை குளிக்க வேண்டும். இப்படி செய்து வருவதால், தலைமுடி அடர்த்தியாகவும், பளபளப்புடனும் வளரும்.

ஊட்டச்சத்து

ஆரோக்கியமான, அதிகமான முடி வளர்ச்சிக்கு நம் உடலுக்கும் தேவையான ஊட்டச்சத்துகள் இருக்க வேண்டியது அவசியமானது. சந்தைகளில் கிடைக்கும் பல எண்ணெய்களையும், ஷாம்புகளையும் உபயோகிப்பதை காட்டிலும் சத்தான ஆகாரங்கள் முடி வளர்ச்சிக்கு உதவும். பச்சைக் காய்கறிகளை நிறைய சாப்பிடுவதும் கறிவேப்பிலை, நெல்லிக்காய், பால், பழங்கள், முளைக்கட்டிய தானியங்கள், வெண்ணெய், கோதுமை உணவுகள், சோயாபீன்ஸ், பருப்பு வகைகளை நிறைய உணவாகக் கொள்வதும் முடியை நன்கு வளர்த்திட வழிவகுக்கும். வெயிட் ஏறக்கூடாது என்று அரை இட்லி சாப்பிட்டு பேஷனுக்காக டயட்டில் இருப்பவர்கள் முடி உதிர்வதைப் பற்றி எல்லாம் தயவு செய்து கவலைப்படாதீர்கள்… ஏனெனில் அப்படி எல்லாம் சாப்பிட்டு முடி உதிர்வதை எந்த மாத்திரையாலும், க்ரீம்களாலும் தடுக்க முடியாது.

செம்பருத்தி

செம்பருத்திப்பூவின் சாறை முடி உதிர்ந்த இடத்தில் தேய்த்து வந்தால், தலைமுடி நன்றாக வளரும். ஆலிவ் ஆயிலை முதல் நாள் இரவு சூடாக்கி தலையில் தேய்த்து மறுநாள் காலையில் குளித்தால், முடி பளபளப்பாகவும், நன்றாகவும் வளரும். செம்பருத்தி பூ அதிக குளிர்ச்சியைத் தரும் என்பதால் இரவு நேரங்களில் தேய்ப்பதைத் தவிர்த்து விடுங்கள். உடல் அதிகளவில் உஷ்ணமானாலும் முடி உதிர ஆரம்பிக்கும். இந்த உஷ்ணத்தையும் செம்பருத்தி பூ போக்கிவிடும்.

தைலம்

தாமரை இலையை அரைத்துச் சாறெடுத்து நல்லெண்ணெயுடன் கலந்து தைலமாக காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இதனை தலைமுடி உதிர்ந்து வழுக்கைப் போல் காட்சியளிக்கும் இடத்தில் தேய்த்துவர, அந்த இடத்தில் முடி கருகருவென மீண்டும் வளரத் துவங்கிவிடும்.

கீழாநெல்லி

வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

வெந்தயம்

வெந்தயத்தை தண்ணீர் விட்டு அரைத்து, அந்த விழுதை தலையில் தேய்த்து, அரைமணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். அடிக்கடி இவ்வாறு செய்வதால் முடி கொட்டு அடியோடு நின்று விடும். பின் நன்றாக வளரவும் துவங்கும்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயை தினசரி முடியின் வேர்கால்களில் தடவி, விரல்களால் நன்றாக மசாஜ் செய்து வந்தால் முடி நன்றாக வளரும். அப்படி மசாஜ் செய்யும் போது, நகங்கள் முடியின் வேர் கால்களில் படக்கூடாது.

மலச்சிக்கல்

மலச்சிக்கல் இருந்தால், உடல் சூடு அதிகமாகி, உடலில் பித்தம் அதிகரித்து, தலைமுடி கொட்ட ஆரம்பித்து விடும். எனவே மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் முடி உதிர்வதைத் தடுக்கும் வழியாகும்.

நேர்வாளங்கொட்டை

சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

கொத்தமல்லி

கொத்தமல்லி இலையின் சாற்றைக் கொண்டு, தலைமுடியின் வேர்க்கால்களில் மசாஜ் செய்து வந்தால் தலைமுடி கருமையாய் வளரும். தேங்காய் எண்ணெய்யுடன் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து தலையில் மசாஜ் செய்துவர, முடி நன்கு வளரும்.

வேப்பிலை

ஒரு கைப்பிடி வேப்பிலையை எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். தலைமுடிக்கு எந்த பிரச்சனையும் வராது

முடி உதிர்வு குறைய

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!