வாகினி – 4 | மோ. ரவிந்தர்

 வாகினி – 4 | மோ. ரவிந்தர்

அதிகாலை நேரம்,

வீட்டின் சமையலறையில் இருந்து பாத்திரங்கள் எல்லாம் “டமால்… டுமீல்…” என்று பெறும் சத்தத்துடன் தரையில் பறந்துக் கொண்டிருந்தன.

“ஏய்… வாகினி பள்ளிக்கூடத்திற்கு நேரமாகுது சீக்கிரமா முகத்த அளம்பிட்டு உள்ள வா” என்று சமையலறையில் இருந்து வீட்டிற்கு வெளியே இருந்த வாகினிக்கு குரல் கொடுத்தாள், கஸ்தூரி.

வீட்டின் வெளிப்புறத்தில் புதிதாக நட்டுவைத்த வேப்பிலை செடியின் பக்கத்தில் ஒரு தண்ணீர் தொட்டியும், அதன் பக்கத்தில் இன்னும் ஓரிரு நாளில் பூத்துக்குலுங்க கனகாம்பர செடி தயாராகிக்கொண்டிந்தது. நாளை பூத்துக்குலுங்கும் பூவுக்காக இன்றே தயாராகி, இடது கையில் பல்பொடி பொடியுடன் வலதுகையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டிந்தாள்.

“இதோ வரம்மா…” என்று குரல் கொடுத்து விட்டுத் தொட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து அவசர அவசரமாக முகத்தையும், கைகால்களையும், கழிவிக்கொண்டு வீட்டுக்குள் ஓடினாள், வாகினி.

கஸ்தூரி வாகினியின் முகத்தில் தண்ணீர் வழிவதைக் கண்டு பெரும் சீற்றத்துடன்.

“சனியனே… காலையில ஸ்கூல் கிளம்பாம எப்ப பார்த்தாலும் அந்தச் செடிக்கிட்டையே விளையாடிட்டு இரு, எல்லாத்தையும் ஒரு நாள் பிடுங்கி போடுறேனா இல்லையான்னு பாரு” என்று வாகினியை அதட்டினாள்.

வாகினி, அம்மாவிடம் திட்டை வாங்கிக்கொண்டு கொடிக் கயிற்றில் தொங்கிக்கொண்டிந்த பள்ளி சீர் உடையை எடுத்து உடுத்திக்கொள்ள வேறொரு அறைக்குப் போனாள்.

அப்போது, காலை வேலைகளை எல்லாம் முடித்து விட்டு சாப்பிடுவதற்காகச் சதாசிவம் வீட்டுக்குள் நுழைந்தார்.

கஸ்தூரி, கத்திக்கொண்டிருப்பதைப் பார்த்ததுமே. ‘வழக்கம் போல் இன்று அவள் சீறுவதற்குத் தாயராகிக் கொண்டிருக்கிறாள்’ என்று அவர் அவளிடம் எதுவும் பேசாமல் சாப்பிடுவதற்குத் தரையில் அமர்ந்தார், சதாசிவம்.

கஸ்தூரிக்கும் சதாசிவத்திற்கும் பொருத்தம் பார்த்து தான் இருவீட்டாரும் திருமணம் செய்து வைத்தனர். கஸ்தூரிக்கு, ஆகாயத்தில் இருப்பதையெல்லாம் எடுத்துவந்து தன் மடியில் கட்டிக்கொள்ள வேண்டும் என்று ஆசை. ஆனால், சதாசிவம் உழைக்கும் ஏழை உழைப்பாளி.

வீட்டிற்குத் தேவைப்படும் அலுமினிய பாத்திரங்கள் செய்யும் தொழில் கூடாரத்தில் பத்து வருடங்களா குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்த்து வருகிறார். இன்று வரை குறைந்த சம்பளத்தில் தான் இல்லறம் ஓடுகிறது. இதனாலேயே, இருவரும் இடையேயும் அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கமாகி இது நாளடைவில் மனஸ்தாபத்தில் வந்து நிற்கிறது.

அவள் பெண்மையின் அழகு உருவம். மூன்று குழந்தைகளுக்குத் தாயானாலும் இப்போதும் அவள் கட்டழகு குறையாத பேரழிகிதான். கொஞ்சம் சிவப்பு நிறம், கண்ணத்தில் களைந்த இருமுடி அவளின் கண்ணியத்தைக் கடன் வாங்கி அழகாய்க் காட்டியது, உடுத்தியிருந்த சேலையின் முந்தானை கூட அவள் பேரழகி என்று வர்ணித்துக் காட்டியது.

சதாசிவம் சாப்பிடுவதற்குச் சாப்பாடு தட்டை எடுத்து வந்து அவன் அருகில் “டங்..” என்று வைத்துவிட்டு நிமிர்ந்தாள், கஸ்தூரி.

‘ஒன்றும் இல்லாதவருக்கு வாக்கப்பட்டுக் காலம் பூராவும் சோத்த வடிச்சுக் கொட்டதான் கடவுள் என்ன படச்சி இருக்கானோ என்னமோ. எல்லாம் என் தலை எழுத்து’ என்று மனதுக்குள்ளே முனு முனுத்துக்கொண்டே தனது கன்னத்தில் படர்ந்த இரு முடியை கையால் சரிசெய்து கொண்டே தலையில் அடித்துக்கொண்டு நின்றாள்.

“ஏண்டி… சோறு தானே கேட்டேன், உங்க வீட்டுச் சொத்தையா கேட்டேன் இப்படி வைக்கிறே?” என்றான், சதாசிவம்.

“ஆமா!, வீட்ல அரிசி பருப்பு இல்லன்னு ரெண்டு நாளா ஓயாமல் சொல்லிட்டு இருக்கேன் என்ன மனஷயா நீ, சொல்றத காதுலையே போட்டுக்க மாட்டே. ராணி மாதிரி இருக்க வேண்டிய நான் இப்படி உங்கிட்ட அஞ்சுக்கும் பத்துக்கும் திண்டாடிட்டு இருக்கேன்” என்றாள் கோபத்துடன், கஸ்தூரி.

“நான் கூடத் தான் எட்டு வருஷத்துக்கு முன்னாடி ஆசைப்பட்டேன், உன்ன கட்டிக்கிட்ட என் வாழ்க்கை சுப போகமா இருக்குமுன்னு. ஆனா, இப்ப தானே தெரியுது சூர்ப்பநகையை என் காலில் கட்டி வச்சுட்டாங்கன்னு?”

“ஆமா, நீங்க மட்டும் அறவழியில் வாழ்ந்த புத்தரு” என்றாள், அவளும் பதிலுக்கு.

“கொடுக்கிறத வச்சி குடும்பம் பாக்கணும் அதவிட்டுட்டு பறக்க

நெனைச்சா, இப்படித்தான் ஆகும்” என்றான், சதாசிவம்.

“இருக்கிறதுக்கே ஒன்றுமில்ல, இதுல நான் எங்க பறக்க நினைக்கிறது”

இருவரின் சண்டை பெரிதாவதற்குள் அங்கு வந்து சேர்ந்தாள், வாகினி. அவள் வருவதைப் பார்த்து இருவரும் சண்டையை நிறுத்திக் கொண்டனர்.

வாகினி பள்ளி சீருடையை மாற்றிக் கொண்டு உணவு உண்பதற்காக அவளின் அப்பாவின் இடது பக்கத்தில் வந்து அமர்ந்தாள். அம்மாவிடமிருந்து சாப்பாட்டை வாங்கிக்கொண்டே சாப்பிடத் தயாரானாள்.

அவளுக்கு அந்த நேரத்தில் நேற்று டீச்சர் வாங்கி வரச்சொன்னா கணக்கு நோட்டு புத்தகத்தின் ஞாபகம் வந்ததும், சாப்பிடுவதை அப்படியே நிறுத்திவிட்டு அப்பாவிடம் கேட்பதற்குத் தயாரானாள்.

“அப்பா…” என்ற ஒரு மெல்லிய குரலில் கூப்பிட்டுவிட்டு உணவு உண்ண ஆரம்பித்தாள்.

சதாசிவம், கஸ்தூரி மீது இருந்த கோபத்தை எல்லாம் மறந்து.

“என்னம்மா…” என்று மகளைச் செல்லமாகத் திரும்பிப் பார்த்தார்.

“ஒன்னும் இல்லப்பா…”

சிறு வினாடிக்குப் பிறகு வாகினி சொல்லிலிருந்து தேனிசை ஒலிக்கத் தொடங்கியது.

“அப்பா…”

“சொல்லும்மா என்ன…?” மழலை மொழியில் பேசினார், சதாசிவம்.

“அப்பா, டீச்சர் நேத்திக்கு கணக்கு நோட் வாங்கிட்டு வரச் சொன்னாங்க, வாங்கிதாங்கப்பா?”

“சரிம்மா, பள்ளிக்கூடத்துக்குப் போகும்போது நான் உனக்கு வாங்கிதாறேன், சரியா!”

“சரிப்பா”

“சரி சாப்பிடு…” என்றார்.

அப்பா கூறியதில் அவளின் முகத்தில் சிறு புன்னகை தவழ்ந்து விளையாடியது.

ஆனாலும், சதாசிவத்திற்குக் கஸ்தூரியின் மீது இருந்த கோபம் அந்த நேரத்தில் குறையவில்லை, கஸ்தூரியும் கோபமாகத் தான் பார்த்துக்கொண்டிந்தாள்.

அந்த நேரத்தில் பக்கத்துத் தெருவில் வசிக்கும் மீனா.

“அக்கா…அக்கா…” என்று கூறிக்கொண்டே கைக் குழந்தையுடன் வீட்டிற்குள் நுழைந்தாள்.

கஸ்தூரி இருக்கும் தெருவை கடந்துதான், மீனா அவளின் தெரு வீதியை அடைய முடியும். இதனால், இவர்கள் இருவரும் அடிக்கடி பார்த்துக் கொள்வதினால் இருவருக்கும் பலமான நட்பு மலர்ந்தது.

வாகினிக்குப் பக்கத்தில் அமைதியாக நின்றுக்கொண்டிருந்த கஸ்தூரி வீட்டு வாசலை சற்றுத் திரும்பி பார்த்தாள்.

“வா… மீனா, குழந்தை ரொம்ப அழறானா?” என்று உள்ளே அழைத்தாள்”

“ஆமா, அக்கா ரொம்ப அழறான்னு மரகதம்மா. குழந்தையே உங்க கையில கொடுக்கச் சொன்னாங்க, நல்ல வேலை நான் அந்த வழியா போயிட்டு இருந்தேன்” என்று கூறிவிட்டு அழுது கொண்டிருந்த குழந்தை பாபுவை கஸ்தூரி கையில் கொடுத்தாள், மீனா.

சாப்பிட்டுக் கொண்டிருந்த சதாசிவம் மீனாவிடம் நலன் விசாரித்தார்.

“என்னம்மா, உங்க வீட்டுக்காரர பார்த்து ரொம்ப நாள் ஆகுது, ஊர்ல தான் இருக்கிறாரா?” என்று கூறிக்கொண்டே சாப்பாட்டில் கையை வைத்தார்.

“ஆமாண்ணே, ஊருக்குதான் போய் இருக்காரு. நாட்ட சுத்துர வேலை அவருக்கு, என்ன இருந்து என்ன பிரயோஜனம் பேரு மட்டும்தான் மனத்தத்துவ டாக்டர். வீட்ல இருக்குகிற குழந்தைங்க ஞாபகம் கொஞ்சம் கூட இல்ல அவருக்கு” என்று தன் வருத்தத்தைத் தெரிவித்தாள், மீனா.

இதனைக் கேட்டதுமே கஸ்தூரி முகத்தில் எள்ளும் கொள்ளுமாக வெடித்தது.

‘இங்கேயும் ஒன்னு இருக்கே, வெலங்காதது’ என்று மௌன கீதம் படினாள்.

“சரிக்கா, அவர் நாளைக்கு ஊருக்குத் திரும்பி வராரு. அவர் வந்தா, இந்தச் சாவியை மறக்காம அவர் கையிலே கொடுத்துடுங்க. ஸ்கூல் லீவு முடிய போகுது பசங்கள வேற அம்மா வீட்டிலிருந்து நான் கூட்டிக்கிட்டு வரனும். அதுக்குதான் போயிட்டு இருக்கேன்” என்று வீட்டு சாவியைக் கஸ்தூரி கையில் கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு புறப்பட்டாள், மீனா.

“போதும் சாப்பிட்டது ஸ்கூலுக்கு நேரமாகுது சீக்கிரம் கிளம்பு” என்று வாகினியிடம் கூறிவிட்டு, பாபுவை இடுப்பில் வைத்துக்கொண்டே வாகினியின் புத்தகப் பையை எடுத்துவர உள்ளறைக்குச் சென்றாள், கஸ்தூரி.

சதாசிவம், மனைவியிடம் ஏதோ ஒன்றைக் கூற வேண்டும் என்று வெகுநேரமாக நினைத்து சாப்பிட்ட இடத்திலேயே நின்று கொண்டிருந்தார்.

உள்ளே சென்ற கஸ்தூரி சிறிது நேரத்தில் பையுடன் திரும்பி வந்து.

“வாகினி இதைப் பிடி,” என்று கூறிவிட்டு, வாகினி கையில் பையைக் கொடுத்தாள்.

அதைக் கையில் வாங்கிக்கொண்டு வாகினி வெளியே வேகமாக ஓடினாள்.

“கஸ்தூரி, நமக்குள்ள இந்த வேலையாலே அடிக்கடி சண்டை வந்துகிட்டே இருக்கு. அதனால, இந்த வேலையை விட்டுட்டு புதுசா ஒரு தொழில் தொடங்கலான்னு இருக்கேன், நீ என்ன சொல்ற…?”

“அதுதான், நான் பல வருமா உங்கிட்ட சொல்லிட்டு இருக்க, இப்பவச்சும் உங்களுக்கு ஞானம் வந்ததே?”

“சரி அதைவிடு, இனி நடக்க வேண்டியத பேசு?”

“என்ன செய்யப் போறீங்க?”

“எனக்குத் தெரிந்த ஓரு வேலையே இரும்பு அடிக்கிறதுதான், அதயே தனியா எடுத்து செய்யலான்னு இருக்கேன், நீ என்ன சொல்ற”

“தனியா தொழில் தொடங்குறதே பெரிய விஷயம்தானே, தொடங்குங்க!” என்று அலுத்துக் கொண்டாள், அதேசமயம், கஸ்தூரி முகத்தில் புத்துணர்ச்சி பொங்கி வழிந்தது.

“கஸ்தூரி, இந்தத் தொழில் தொடங்க எனக்கு எப்படியும் ஓரு லட்சமாவது தேவைப்படும். எப்படியாச்சும், நான் ஐம்பதாயிரம் வரை வெளியே பொறட்டிடுவேன். நீயும் ஏதாவது புரட்டிக் கொடுத்தினா?, எனக்கு இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும்” என்று ஒரு வெடிகுண்டை போட்டான், சதாசிவம்.

இப்படி அவன் கூறும் போது, கஸ்தூரியின் உள்ளம் பயத்தால் வெடித்துச் சிதறியது. இருந்தும், ‘புதிய தொழில் ஆச்சே இத சும்மா விட முடியுமா, கூட இருந்து நாம் தானே ஏதாவது செய்தாகனும்’ எண்ணிக்கொண்டே.

‘வட்டி இல்லாமல் யார் பணம் கொடுப்பார். ரேகா அக்காவிடம் கேட்கலாமா?, வேண்டாம், அவங்க புதுசா வீடு கட்டிட்டு இருக்காங்க நிச்சயமா இப்ப தர மாட்டாங்க. சரி மீனாவிடமே கேட்டுப் பார்க்கலாம் அவள் தான் வட்டி இல்லாமல் நமக்குக் கடன் தருவாள்’ என்று மனதுக்குள் முடிவு எடுத்துக்கொண்டு.

“சரிங்க நீங்கள் வேலைக்குக் கிளம்புங்க, எல்லாத்தையும் அப்பரமா பேசிக்கலாம்” என்று அவனை அன்புடன் வழி அனுப்பினாள், கஸ்தூரி.

வீட்டுக்கு வெளியே வாகினி முதுகில் ஸ்கூல் பேக்குடன் ஸ்கூட்டரை பிடித்துக் கொண்டு சதாசிவத்திற்காகக் காத்திருந்தாள். வெளியே வந்த சதாசிவம் ஸ்கூட்டரை உதைத்து வாகினியை அதில் அமர வைத்து குழந்தையின் கன்னத்தில் செல்லமாகக் கில்லிக்கொண்டே கூறினார்.

“வாகினி அப்பாவிற்கு ஓரு சின்ன வேலை இருக்கு, நீ ஸ்கூல் பக்கத்தில் இருக்கக் குறிஞ்சி கடையிலேயே நோட்டு வாங்கிட்டு, சாயந்திரமா உன் பிரண்ட்ஸோட வீட்டுக்கு வந்துடு” என்று சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஐந்து ரூபாய், வாகினி கையில் கொடுத்து விட்டு வாகனத்தை எடுத்தார்.

“பரவால்ல அப்பா, அத நான் பார்த்துக்கிறேன் நீங்க கவலைப்படாதீங்க” என்று புன்னகைத்தாள், வாகினி.

கஸ்தூரி, கையில் குழந்தையுடன் வீட்டு வாசலில் நின்றுகொண்டு, இருவரையும் கவனித்துக்கொண்டு, மீதி பணத்துக்கு அஸ்திவாரம் போட்டுக்கொண்டிருந்தாள்.

(தொடரும்)

< மூன்றாவது பகுதி | ஐந்தாவது பகுதி >

கமலகண்ணன்

18 Comments

  • Hi hello very e beautiful story very good super Ravi congrats

    • மிக்க நன்றி அம்மா தங்கள் பாராட்டுகளுக்கு கதையை தொடர்ந்து படியுங்கள்.

  • Thank you so much for continuing to read the story of Vaagini

  • Good Narration

  • சொத்தையா கேட்டேன் சோத்தைதானே கேட்டேன் வரிகள் அருமை…சூர்ப்பனகை அடைமொழி அற்புதம்.வாழ்த்துக்கள்.

    • நன்றி நண்பரே தங்கள் பாராட்டுதலுக்கு உங்கள் பார்வை கழுகு பார்வை அதனால் சில வரிகள் தங்கள் கண்களுக்கு கலையாகவே தெரிகிறது

  • நடுத்தர குடும்பத்தின் நிலைமை மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்

  • நன்றிகள் பல அம்மா! தற்போதைய நடுத்தர குடும்பத்தின் நிலை இப்படித்தான் இருக்கிறது என்ன செய்தது காலம் தந்த மாற்றம். ஆனால், இது 1990 நடக்கும் கதையின் தோற்றம்.

  • Very interesting story Ravi keep it up

  • Super stories

  • Super super

  • Nice

  • arumai nanba

  • சராசரி குடும்ப வாழ்வில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதை எழுத்தில் வடித்தது அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...