உலக ஆமைகள் தினம் மே 23ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அரிய வகை விலங்கினங்களில் ஒன்றான ஆமைகளின் உயிரிழப்பதைத் தடுக்கவும், அழிவிலிருந்து பாதுகாக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக ஆமைகள் தினம் 2000ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது.
சர்வதேச மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினம்
வளரும் நாடுகளில் சுமார் 2-3.5 மில்லியன் பெண்கள் இந்நோயுடன் வாழ்கின்றனர். ஆண்டிற்கு ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் பேர் இதனால் பாதிப்படைகின்றனர்.
ஆகவே இதனை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என 2003ஆம் ஆண்டு பிரச்சார இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதனால் ஐ.நா.சபையும் மே 23ஆம் தேதியை மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினமாக அறிவித்தது.
கார்ல் லின்னேயஸ்
நவீன வகைப்பாட்டியலின் தந்தை கார்ல் லின்னேயஸ் 1707ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி ஸ்வீடனின் ராஷல்ட் கிராமத்தில் பிறந்தார்.
இவர் படிப்பை முடித்துவிட்டு ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார். அதன்பிறகு தாவரங்கள், பறவைகள் மட்டுமல்லாமல் புவியியல் குறித்தும் ஆராய்ந்து ஏராளமான குறிப்புகளை எழுதினார்.
புதுவகை தாவரங்களைக் கண்டறிந்து ஃப்ளோரோ லேப்போனிகா என்ற நூலை எழுதினார். இவரது சிஸ்டம் ஆஃப் நேச்சர் நூல் 1735ஆம் ஆண்டு வெளிவந்து, தாவரவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
1753ஆம் ஆண்டு இயற்கை அறிவியல் களத்தில் மாஸ்டர் பீஸ் எனக் குறிப்பிடப்பட்ட பிளான்ட் ஸ்பீசிஸ் நூலில் அனைத்து தாவரங்களையும் வரிசைப்படுத்தி, வகைப்படுத்தி, அனைத்திற்கும் பொருத்தமாக பெயர் சூட்டினார்.
தற்கால சூழலியலின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் கார்ல் லின்னேயஸ் 70வது வயதில் (1778) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1981ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி தமிழ் திரைப்பட பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி மறைந்தார்.
1906ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி நவீன நாடக இலக்கியத்தின் தந்தை ஹென்ரிக் இப்சன் மறைந்தார்.
