வீட்டிலேயே ஈசியா ஹேர் கலரிங் செய்ய!
ஹேர் கலரிங் செய்வது தற்போது டிரென்ட்-ஆக மாறிவிட்டது. ஆனால், ஹேர் கலரிங் அழகு நிலையத்தில் பொய் செய்தால் பணம் மற்றும் நேரம் அதிகளவில் செலவாகும்.
ஹேர் கலரிங் செய்வது தற்போது டிரென்ட்-ஆக மாறிவிட்டது. ஆனால், ஹேர் கலரிங் அழகு நிலையத்தில் பொய் செய்தால் பணம் மற்றும் நேரம் அதிகளவில் செலவாகும். அதை விட முக்கியமான ஒன்று அதில் அதிகமாகம் இரசாயனப் பொருட்கள் உள்ளன.
இதை பயன்படுத்தினால் தலைமுடி (Hair) வண்ணமாக மாறுவதுடன் தலை முடி இல்லா மொட்டை தலையாகவும் வாய்புகள் அதிகம். எனவே, நாம் நேரம் மற்றும் பணம், தலைமுடி ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு ஹேர் கலரிங் (Hair Colour) செய்யலாம். வீட்டிலேயே எப்படி ஹேர் கலரிங் செய்வது அப்டின்னு உங்களுக்கு குழப்பத்துல இருக்குறவங்களா இனி கவலையே வேண்டாம். எந்த பின்விளைவுகளும் இல்லாத மாதரி உங்க கூந்தலை அழகா ஹேர் கலரிங் செய்யுறதுக்கு இதோ சில டிப்ஸ்…!
மருதாணி பொடி – 50 கிராம்.
தண்ணீர் சேர்க்காமல் அரைத்த பீட்ரூட் ஜூஸ் – 50 மி.லி.
டீ டிகாஸன் – அரை டம்ளர்.
செய்முறை
மருதாணி பொடி, தண்ணீர் சேர்க்காமல் அரைத்த பீட்ரூட் ஜூஸ் மற்றும் டீ டிகாஸன் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். அந்த கலவையை 3 மணி நேரம் அதை அப்படியே வைக்கவும்.
மூன்று மணி நேரத்திற்கு பின்னர் அந்த கலவையை தலையில் தடவி சுமார் 2 மணி நேரம் காய வைக்கவும்.
பின்னர் கலரிங் ப்ரூஃப் ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். அது மட்டுமின்றி வெறும் பீட்ரூட்டையும் கேரட்டையும் கூட நன்றாக அரைத்து தலையில் போட்டு 30 நிமிடம் வெயிலில் காய வைத்து. பின்னர் கலரிங் ப்ரூஃப் ஷாம்பூ கொண்டு தலையை அலசலாம். எந்த வித கெமிக்கல்களும் இல்லாத இது உங்கள் தலைக்கு ஒரு நேச்சுரல் கலரைத் தரும்.
1 Comment
Useful tips for ladies, tq fr sharing