கொசு தொல்லையா… இனி ஒரு கொசு கூட தப்பிக்க முடியாது..!!

 கொசு தொல்லையா… இனி ஒரு கொசு கூட தப்பிக்க முடியாது..!!

கொசுவை ஒழிக்க நாம் மொதுவாக பயன்படுத்தப்படும் சந்தையில் கிடைக்கும், சுருள்கள், திரவங்கள், ஸ்ப்ரே போன்றவை, நமது உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பவை என்பது அனைவரும் அறிந்ததே.

கொசுத் தொல்லை மிகவும் அதிகமாகி விட்ட நிலையில், கொசுவை ஒழிக்க நாம் மொதுவாக பயன்படுத்தப்படும் சந்தையில் கிடைக்கும், சுருள்கள், திரவங்கள், ஸ்ப்ரே போன்றவை, நமது உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பவை என்பது அனைவரும் அறிந்ததே. கொசுக்கள் வீட்டிற்குள் நுழைவதை எவ்வாறு தடுப்பது என்பது எல்லோருக்கும் இப்போதைய சிந்தனையாக உள்ளது எனலாம். தூங்கும் நேரத்தில் கொசு தொல்லையினால் தூக்கம் கெட்டு சோர்வு தான் மிஞ்சுகிறது, ஆனால், நீங்கள் கவலை பட வேண்டியதில்லை, இதற்கான தீர்வு பாட்டி வைத்தியத்தில் இருக்கிறது. அது கொசுவை அம்ட்டும் ஒழிக்கும். நமது உடல் நலனை பாதிக்காது.

பல ஆண்டுகளாக முயற்சிக்கப்பட்ட சில முறைகள் இவை. பாட்டி வைத்தியத்தில் உள்ள மிகப்பெரிய விஷயம் என்னவென்றால் அது 100% பாதுகாப்பான முறை என்பது தான். கீழே கொடுக்கப்பட்டுள்ள சில யோசனைகளில் ஏதேனும் ஒன்றை அல்லது பலவற்றை பின்பற்றினால், கொசுத் தொல்லை இல்லாமல் நிம்மதியாக தூங்கலாம்.

எலுமிச்சை மற்றும் யூகலிப்டஸ் எண்ணெய். இந்த எண்ணைகளை கைகளிலும் கால்களிலும் தடவவும். நீங்கள் வீட்டிற்கு வெளியே இருந்தால், ஒரு கொசு கூட அருகில் அண்டாது. மேலும் எலுமிச்சை வரஸை எதிர்க்கும் ஆற்றலுடன் செயல்படுகிறது. கொசுக்கள் அதன் வாசனையை தாங்காமல் ஓடுகின்றன.

கடுகு எண்ணெயில் செலரி பொடியை கலக்கவும். அட்டை துண்டுகளை அதனை நனைக்கவும். அறையில் ஒரு உயரத்தில் இதனை வைக்கவும். இந்த வாசனைக்கும் கொசுக்கள் அண்டாது.

வீட்டில் தினமும் மாலை கற்பூரத்தை ஏற்றவும். நீங்கள் அறையை மூடிவிட்டு 10 நிமிடங்கள் கற்பூரத்தை ஏற்றினால், அனைத்து கொசுக்களும் அதன் வாசனை காரணமாக ஓடிவிடும்.

விளக்கில் சிறிது மண்ணெண்ணெய் மற்றும் ஒரு சில துளி வேப்ப எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். 2 துண்டு கற்பூரம் கலக்கவும். இந்த விளக்கை ஏற்றவும், கொசுக்கள் அதிலிருந்து வரும் வாசனையினால் ஓடிவிடும்.

தேங்காய் எண்ணெயுடன் சம அளவு வேப்ப எண்ணெயை கலந்து உடலில் தடவவும். நீங்கள் எண்ணெயை தடவிக் கொள்ள விரும்பவில்லை என்றால், இந்த எண்ணெய் கலவையை கொண்டு விளக்கு ஏற்றலாம்.

கொசுக்கள் மறைந்திருக்கும் இடத்தில் எலுமிச்சை மற்றும் கிராம்பு கரைசலை தெளிக்கவும். திரைச்சீலைகள் பின்னால் அல்லது அலமாரியின் பின்னால், கட்டிலின் கீழ் பகுதியில் உள்ள கொசுக்களும் ஓடி விடும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...