வெங்காயத்தின் தோலின் நன்மைகள்…
வெங்காயத்தின் தோலை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கொப்பளித்தாலோ அல்லது தேநீரில் கொதிக்கவைத்து குடித்தாலோ, அது தொண்டை புண் மற்றும் பிற பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
நம்மில் பலருக்கு வெங்காயம் மிகவும் பிடிக்கும். அனைவரும் அதை விரும்பி சாப்பிடுகிறோம். ஆனால் பெரும்பாலான மக்கள் வெங்காயத் தோல்களை குப்பைகளாக வீசிவிடுகிறார்கள். வெங்காயத் தோல்களைப் பயன்படுத்துவதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன என்பது பலருக்குத் தெரியாது.
ஆம், வெங்காயத் தோலில் பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் நமது ஆரோக்கியத்துடன் நமது சருமத்தின் அழகையும் அதிகரிக்க உதவுகின்றன. வெங்காயத் தோல்களை எந்த வகையில் பயன்படுத்தினால் ஆச்சரியப்படும் நன்மைகளை நாம் அடைய முடியும் என்பதை இங்கே காணலாம்.
நோயெதிர்ப்பு அமைப்பு வலுவாக இருக்கும்
நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்க வெங்காய தோல்களைப் பயன்படுத்தலாம். பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வெங்காய தோல்களில் காணப்படுகின்றன. அவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வெங்காய தோல்களின் சாறு உட்கொள்ளப்படுகிறது.
வீக்கம் மற்றும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது
ஒரு ஆய்வின்படி, வெங்காயத் தோல்களில் நார்ச்சத்து ஏராளமாகக் காணப்படுகிறது. இதனுடன், இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள், குர்செடின் மற்றும் பினோலிக் ஆகியவை உடலில் ஏற்படும் வீக்கம், புற்றுநோய் போன்ற பிரச்சினைகளைத் தடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.