ஜெய ப்ரியா இருந்திருந்தால்…..
அந்த நாள் ..
என்
வாழ்வு
சந்தித்த
முதல் கொடூரம் …
மனிதர்களென்று
அன்னை
அடையாளமிட்டவர்கள்
அன்று
என் கண்முன்
மிருகங்களாய்…
பிரியமாய்
தூக்கியபோது
பிணந்தின்னி
கழுகுகள் என
நான்
அறிந்திருக்கவில்லை ..
அருவருப்பான
முதல்
முத்தம்
அக்கிராமத்தின்
ஆணிவேராய்
அன்று தான்
பெற்றேன் ..
அந்நியர்கள்
என்றாலும்
அண்ணா
என்று தானே
அழைத்தேன் …
வயிற்றுப்
பசியை விட
காமப்பசி
பெரிதென
எனக்கும்
உணர்த்தினார்கள்…
அம்மா ..
அம்மா…என்ற
என் கதறல்
கற்பத்தையும்
கலக்கி இருக்கும்
நீ மனிதனானால் …
அம்மா சொன்ன
” பூச்சாண்டி”
அவன் தானோ
என்று கூட
தோன்றியது …
கால் சட்டை
இழுத்து
அவனுறுப்பை
(அருவருப்பை)
காட்டினான் ….
பயத்தில்
மூடப்பட்ட
கண்கள்
கடைசி வரை
திறக்காமலேயே
போனது..
ஆண் வர்க்கத்தை
வெறுத்தேன்
அன்று
என் அப்பாவையும்
கூடத்தான் ..
நீ கேட்டிருந்தால்
நானே
என்
பிறந்த மேனியை
காட்டியிருப்பேன்..
காரணம்
எனக்கு அதன்
வக்கிரம்
தெரியாது ..
அம்மா …
என் வாழ்க்கை
தொடங்குமுன்பே
முடித்து
விட்டார்கள் ..
பிறந்தவுடன்
என்னை
கொன்றிருந்தால்
நலமென
சென்றிருப்பேனோ ..!!!??
மனிதர்கள்
சிதைப்பதை விட
மண்ணில்
சிதைப்பது மேல் ..
மகளென்றும்
உடன் பிறப்பென்றும்
பார்க்காத
ஆணுறுப்புகள்
அறுக்கப்பட்ட
வேண்டும் …
காமுகர்களின்
இச்சைக்கு
நெருப்புகள்
பிறப்பெடுத்து
உறுப்புகளை
அழிக்க வேண்டும் ..
பசி தேடி
காமம்
தொலைத்து
வீதி அலையும்
பெண்கள்
வேசிகள்
என்றால் …
இந்த
ஆண்களை
போன்ற
இரத்த காட்டேரிகளை
என்சொல்வது …
சாமி கண்
குத்துவது
உண்மை என்றால்
ஏன் இவர்களை
விட்டு
வைத்தது ..
கடவுளே …
பெண் உறுப்பை
துளைக்கும்
ஆண் உறுப்பை
தொலைத்து விடு ..
இல்லையானால்
என்னை போன்ற
உன் பாதத்தில்
ஜெய ப்ரியாக்கள்
விழுந்து கொண்டு
தான் இருப்பார்கள் (இறப்பார்கள் ) …!!!
– ஸ்வீட்லின்