இன்றைய தினப்பலன்கள் (04.07.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (04.07.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் மனதிற்கு திருப்தி அளிக்கும். நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நன்மையை அளிக்கும். ஆன்மிக எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். பேரன், பேத்திகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : நற்பலன்கள் உண்டாகும்.
பரணி : எண்ணங்கள் மேலோங்கும்.
கிருத்திகை : சுபச்செய்திகள் கிடைக்கும்.

ரிஷபம் :

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் செயல்படவும். வாகனம் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். கொடுக்கல்-வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். கணவன்வழி உறவினர்களின் மூலம் அனுகூலமான சூழல் அமையும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற கருத்துக்களை பகிர்வதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
கிருத்திகை : நிதானம் வேண்டும்.
ரோகிணி : குழப்பமான நாள்.
மிருகசீரிஷம் : விவாதங்களை தவிர்க்கவும்.

மிதுனம் :

சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றமான சூழல் அமையும். வாழ்க்கைத் துணைவியின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். வழக்குகள் தொடர்பான முயற்சிகளில் எண்ணிய தீர்ப்புகள் கிடைக்கும். நட்பு வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மயில்நீலம்
மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.
திருவாதிரை : தீர்ப்புகள் சாதகமாகும்.
புனர்பூசம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

கடகம் :

தாய்மாமன்வழி உறவுகளின் மூலம் அலைச்சல்கள் உண்டானாலும் சாதகமான பலன்கள் ஏற்படும். நினைத்த காரியங்களில் இருந்துவந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். தற்பெருமை சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நன்மையை அளிக்கும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஜீரண கோளாறு தொடர்பான இன்னல்கள் ஏற்பட்டு மறையும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.
பூசம் : தடைகளை களைவீர்கள்.
ஆயில்யம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

சிம்மம் :

கணவன், மனைவிக்கிடையே அன்பும், அன்யோன்யமும் அதிகரிக்கும். புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கலைத்துறை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். நுட்பமான செயல்பாடுகளின் மூலம் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். இலக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விருப்பம் உண்டாகும். நகைச்சுவையான உரையாடல்களின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : அன்பு அதிகரிக்கும்.
பூரம் : ஆர்வம் ஏற்படும்.
உத்திரம் : ஆதரவுகள் கிடைக்கும்.

கன்னி :

கால்நடைகளால் இலாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை ஏற்படும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். வீட்டுக்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவது பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.
அஸ்தம் : இன்னல்கள் நீங்கும்.
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.

துலாம் :

காது மற்றும் தொண்டையில் ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் குறைவதற்கான சூழல் உண்டாகும். சகோதர, சகோதரிகளின் மூலம் ஆதரவான சூழல் அமையும். அரசு தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தைரியமான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். பத்திரிக்கை துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : பிரச்சனைகள் குறையும்.
சுவாதி : ஆதரவு கிடைக்கும்.
விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.

விருச்சிகம் :

பற்கள் தொடர்பான சில இன்னல்கள் ஏற்பட்டு மறையும். குடும்ப பெரியோர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையை அளிக்கும். கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்புகளையும் நன்முறையில் பயன்படுத்தவும். மனதிற்கு பிடித்த சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தானியங்கள் தொடர்பான வியாபாரத்தில் இலாபகரமான சூழ்நிலை அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : இன்னல்கள் மறையும்.
அனுஷம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
கேட்டை : இலாபகரமான நாள்.

தனுசு :

உடல் தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய இடங்களுக்கு சென்று வருவதற்கான சூழல் அமையும். பலநாள் பிரச்சனைகளிலிருந்து விழிப்புணர்வுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : சிந்தனைகள் மேம்படும்.
பூராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.
உத்திராடம் : விழிப்புணர்வுடன் செயல்படுவீர்கள்.

மகரம் :

ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தாழ்வு மனப்பான்மை இன்றி மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் காரிய அனுகூலங்கள் உண்டாகும். சமூக கட்டுப்பாடுகள் பற்றிய சிந்தனைகள் அவ்வப்போது ஏற்படும். செய்யும் முயற்சிகளில் பலவித தடைகளை தாண்டி எண்ணிய செயல்களை முடிக்க வேண்டிய சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திராடம் : கவனம் வேண்டும்.
திருவோணம் : அனுகூலம் உண்டாகும்.
அவிட்டம் : தடைகளை களைவீர்கள்.

கும்பம் :

மூத்த உடன்பிறப்புகளால் ஆதரவான பலன்கள் உண்டாகும். மற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் உங்களின் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும். செய்தொழிலில் மேன்மையான உதவிகளும், ஆதரவுகளும் கிடைக்கும். கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு தனவரவு மேம்படும். உடலுழைப்பை காட்டிலும் மதிநுட்ப செயல்பாடுகளில் ஈடுபட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். எதிலும் பொறுமையுடனும், அமைதியுடனும் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
அவிட்டம் : ஆதரவான நாள்.
சதயம் : நன்மதிப்பு அதிகரிக்கும்.
பூரட்டாதி : அமைதியுடன் செயல்படுவீர்கள்.

மீனம் :

பணிபுரியும் இடங்களில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். மூத்த சகோதரர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அரசியல் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உணவகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : ஆதரவுகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : தேவைகள் பூர்த்தியாகும்.
ரேவதி : ஈடுபாடு அதிகரிக்கும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...