வாழை இலைக்குளியல்

வாழை இலைக்குளியல் செய்வதால் போகப் போகும் உயிரைக்கூட திரும்ப மீட்க முடியும் என்கிறார்கள் இயற்கை ஞானி…

இதுக்கு பேருதான் வாழை இலைக் குளியல். வாழை இலையால நம்ம உடம்பு முழுவதும் மறைக்கப்பட்டு வெயிலில் ஒரு மணி நேரம் இருக்க வேண்டும்.

வாழை இலைக்குளியல் செய்வதால் போகப் போகும் உயிரைக்கூட திரும்ப மீட்க முடியும் என்கிறார்கள் இயற்கை ஞானிகள்.!

வாசியை சுத்தப்படுத்தும் இரகசியம் தெரிந்து விட்டால் உடலின் சேர்ந்து விட்ட அளவுக்கதிகமான கரியமில வாயுவை ஒரு மணி நேரத்தில் வெளியேற்றி விடலாமே.!

வாழை இலைக்குளியல்
செய்முறை

  1. இயற்கை வழியில் விளைவித்த வாழை இலைகளை ஆளுக்கு தகுந்தாற்போலும் உருவத்திற்கு தகுந்தாற் போலும் சேகரித்துக் கொள்ள வேண்டும். சுமாராக ஒருவருக்கு எட்டு இலைகள் வரை தேவைப்படும்.!

2.தரையில் ஆறு வாழை நார், நூல் கயிறு அல்லது தென்னங்கயிற்றை வரிசையாக போட வேண்டும்.

3.அதன் மேல் நான்கு வாழை இலைகளை நன்றாக துடைத்து இலையின் தண்டை கையால் லேசாக சதைத்து போடவேண்டும்.!

4.ஒரு காட்டன் டவலை சிறிது நனைத்து தலையில் மப்ளர்போல் சுற்றிக் கட்டிக் கொள்ள வேண்டும்.

5.நான்கு முதல் ஆறு டம்ளர் வரை நீரை குளியல் செய்யப் போகின்ற வருக்கு குடிக்க கொடுக்க வேண்டும்.!

6.பிறகு மெதுவாக அவரை வாழையில் படுக்க வைத்து விட்டு அவரின் மேல் நான்கு முதல் ஆறு இலைகளை தலை முதல் பாதம் வரை வெளியே தெரியாமல் வைத்து நன்றாக மூடிவிடவும். சுவாசம் செய்வதற்காக மூக்கின் மேல் வைக்கும் இலையை மட்டும் லேசாக வெட்டிக் கொள்ள வேண்டும்.!

7.அப்படியே கயிறால் கட்டி படுக்க விடவும். இருபது முதல் 30 நிமிடம் வரை இப்படி இருக்க வேண்டும். உடல் முழுவதும் நன்றாக வேர்த்து இனிமேல் இருக்க முடியாது என்ற நிலை வந்தவுடன். கட்டுகளை அவிழ்த்து இலையை எடுத்துவிடவும்.

8.எழுந்தவுடன் பார்த்தால் கிட்டத்தட்ட இரண்டு முதல் நான்கு லிட்டர் வரை உடலில் இருந்து கெட்டநீர் வெளியேறி இருக்கும்.!

9.எழுந்தவரை நன்றாக ஐந்துமுறை சுவாசம் செய்ய வைத்து தேன் மற்றும் சிறிது இந்துப்புக்கலந்த இரண்டு டம்ளர் நீரை குடிக்க கொடுக்க வேண்டும்.பிறகு 15 நிமிடம் கழித்து குளித்து விடலாம்.!

வாழைகுளியல் பலன்கள்

1.உடல் எடை சீராக இருக்கும்
2.உடலில் உள்ள கெட்ட நீரும் காற்றும் வெளியேறிவிடும்
3.தோல் நோய்கள் குணமாகும்
4.ஆஸ்துமா,இழுப்பு ,அடுக்குத்தும்மல், உடல் பருமன் போன்ற நோய்கள் கட்டுப்படும்
5.சிறுநீரகம், கணையம், கல்லீரல் பலப்படும்
6.ஆண்மைக் குறைவு, கர்பபைக் கோளாறு குணமாகும்
7.உடலுக்கு புத்துணர்வும் புதிய நம்பிக்கையும் கிடைக்கும்
8.கை,கால் வலி, மூட்டுவலி, முதுகுவலி தண்டுவடக் கோளாறுகள் கட்டுப்படும்
9.பசியின்மை, அஜீரணக் கோளாறு, பித்த வாந்தி குணமாகும்
10.ஜாதகத்தில் சிலருக்கு ஏற்படும் மரண கண்டத்தில் இருந்து தப்புவிக்கும்.!

இது மட்டுமல்ல இன்னும் எத்தனையோ அற்புத பலன்களை உடையது வாழை இலைக்குளியல். ஏனெனில் உடலில் பிராணசக்தி துய்மையடையும் உடல், மனம், ஆன்மா அனைத்துமே தூய்மையடையும்.!

குறிப்பு: காலையில் 8 முதல் 11 மணிவரையும் மாலையில் 3 மணி முதல் 5 மணிவரையும் வாழையிலைக் குளியல் செய்ய ஏற்ற நேரம்.!

கீழே விரிப்பை விரித்து மொட்டை மாடி, வெட்டவெளியில் மட்டுமே குளியல் செய்ய வேண்டும். பெண்கள் சுற்றிலும் மறைவான வெட்ட வெளியில் செய்ய வேண்டும்.!

வாழை இலைக்குளியலுக்கு முதல்நாள் முற்றிலும் சமைக்காத உணவை உண்டு வாழை இலைக்குளியல் செய்தால் அதன் பலன் பல மடங்கு உயரும்.!

குளித்த பின் : குளித்த பின்னர், அன்றைய தினம் முழுவதும், பச்சையான பழ காய்கறி உணவு வகைகளை சாப்பிடுவது நல்லது, இல்லையெனில் சிறிது அரிசி உணவு சேர்த்துக் கொள்ளலாம். இது போல, உணவுக்கட்டுப்பாடுகள் கொண்ட நடைமுறைகளின் மூலமே, வாழை இலைக் குளியலால் ஏற்படும் நன்மைகளை, நாம் தக்க வைத்துக் கொள்ளமுடியும்.

புத்துணர்வு பெண்களும் இந்த குளியல் எடுத்துக்கொள்ள, அவர்களும் உடல் நல பாதிப்புகள் நீங்கி, புத்துணர்வு பெறலாம். இயற்கை வழி நிற்பதே, என்றும் நிரந்தரமானது. இயற்கை முறைகளுக்கு மாறுவது என்பது, ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருக்கலாம், ஆயினும், அவற்றால் ஏற்படும் நிரந்தர பலன்களை மனதில் எண்ணினால், சிரமங்கள் யாவும், சிங்கத்தை கண்ட சிறுநரிகளைப் போல, பம்மி ஓடிவிடும்!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!