சொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ் வேண்டுமா? இதோ ஈஸியான வழி!
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்தியா மூன்றாம் கட்ட லாக்டவுனுக்குள் நுழைந்துள்ளது. இந்த லாக் டவுன் 3.0-இல் மக்கள் மற்றும் இந்திய பொருளாதாரம் எதிர்கொள்ளும் சிக்கல்களை குறைக்க, மாநிலங்கள் அதன் மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என மூன்று மண்டலங்களாக பிரிப்பதன் மூலம் மத்திய அரசு சிறிது தளர்வு அளித்துள்ளது.
நீங்கள் இருக்கும் மண்டலத்தின் அடிப்படையில் அங்கு கிடைக்கும் சேவைகள் மற்றும் தளர்வு வேறுபடும். எடுத்துக்காட்டாக, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் இப்போது கேப் சேவைகள் அனுமதிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் இது சிவப்பு மண்டலத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது.
மேலும், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அத்தியாவசியமற்ற பொருட்களை வாங்குவதற்காக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மாநிலங்களுக்கு இடையேயான இயக்கங்கள் இன்னும் தடைசெய்யப்பட்டுள்ளன, மேலும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப விரும்பினால் இ-பாஸ் பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் தமிழ்நாட்டில் இருந்தால், இ-பாஸ் பெற விரும்பினால், இதோ கீழ்வரும் எளிமையான வழிமுறைகளை பின்பபற்றவும்:
- தமிழ்நாடு இ-பாஸ் வலைத்தளத்திற்கு செல்லவும். குறிப்பிட்ட வெப்சைட்டிற்கு செல்ல இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
- ஒரு Excel ஒன்று தரையிரக்கம் ஆகும் அதில், பெயர், வயது, தொலைபேசி எண், முகவரி, காரணம், இ-பாஸின் காலம் போன்ற விவரங்களுடன் முழு படிவத்தையும் நிரப்பி தயாராக வைத்துக் கொள்ளவும்
- ஒருமுறை முடிந்ததும், நான் ஒப்புக்கொள்கிறேன் என்கிற தேர்வுப்பெட்டியை சரிபார்த்து, விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு கேட்கப்பட்டுள்ள இடங்களின் குறிப்பிட்ட கேப்ட்சாவை உள்ளிடவும்.
- கடைசியாக இ-பாஸுக்கு விண்ணப்பிக்க Submitபட்டனை கிளிக் செய்யவும்.