அவனும் நானும் – கார்த்தி ஜெகன்

அவனும் நானும் அவனும் நானும்  நிலவும் ஒளியும் அவனும் நானும்  பார்வையும் மொழியும் அவனும் நானும்  எழுத்தும் கவியும் அவனும் நானும் இதழும் முத்தமும் அவனும் நானும் மூச்சும் சுவாசமும் அவனும் நானும் குளிரும் போர்வையும் அவனும் நானும் உறவும் உணர்வும்…

வல்லரசு… நல்லரசு

வல்லரசு… நல்லரசு ராணுவ பலமும் கண்டம் விட்டு கண்டம் பாயும்  ஏவுகனைகளை அடுக்கி வைத்திருக்கும் நாடுமட்டும்…… “வல்லரசு”ஆகாது. கஜானாவில் தங்கமும் வைரமும் , குவித்து  வைத்திருக்கும் நாடு மட்டும்…… “வல்லரசு” ஆகாது மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் நிறைந்த  நாடு..மட்டும்…… “வல்லரசு” ஆகாது…..…

நடிப்பில் வாழ்ந்தவன் – முகமறியா முகநூல் நண்பர்

வாழ்க்கையில் நடிக்காமல்  நடிப்பில் வாழ்ந்தவன் நீ  உன்னை நடிகர் திலகம் என்றார்கள் இல்லை நீ நடிகர்களின் உலகம்….!  உன் நாக்கில் பட்டு  நகர்ந்த போதுதான்  தமிழுக்கு தனிச்சுவை கூடியது….! உன் உச்சரிப்பைக் கேட்டுத்தான்  தமிழை  ஒழுங்காய் பேசக் கற்றுக் கொண்டோம்….!  உன்…

தாய்மை

தன் உயிரின் உயிரை தன் உயிருக்குள் உரு கொடுத்து மசக்கையின் மயக்கத்தில் மனம் மகிழ்ந்து கணவனின் உள்ளங்கையில் – குழந்தையின்  உயிரோட்டத்தை உணரச்செய்து  உள்ளம் நெகிழ்ந்து துடிப்பில் துவண்டாலும் ஆவலில் ஆசையோடு காத்திருந்து   பேரலையாய் வரும் வலியை கடந்து பிரசவக்கடலில் உயிர்…

நீ

என் பிறப்பின் அர்த்தம் நீ என் உடலின் ரத்தம் நீ என் இதழின் முத்தம் நீ என் உறவின் பந்தம் நீ என் உள்ளத்தின் சத்தம் நீ என் உயிரின் சொந்தம் நீ என் வாழ்வின் வேதம் நீ

அள்ளி வா மழையை!

அருவியாக  ஆர்பரித்தது வானம்  ஆனால்  சிறுதுளிகூட  அள்ளமுடியவில்லை,  இங்கு வடிகால் வசதி ஏதும் செய்யப்படவில்லை.  மழையே !மழையே !வா என்றனர்  அதற்கு எந்தவித இடமும் இல்லாமல்  அவை கலக்கும் இடத்தில் வீடூகள் ஏரிகள் குளங்கள் இருக்கும் இடத்தில் நாம் !!!  மழை…

உள்ளங்கையில்

தாய் மடி சாய்ந்து தாலாட்டில் கண் மூடும் பிள்ளை போல் உன் உள்ளங்கையின் இளஞ்சூட்டில் கண்ணம் பதித்து தலை சாயும் போது இமை மூடுகிறேன்

தூரம்

உன் கை கோர்த்து தோள் உரசி நடக்கும் போது… விண்ணுக்கும் மண்னுக்குமான இடைவெளி கூட… இமை இரண்டுக்குமுள்ள இடைவெளியாய் குறையுதடா!

கைப்பேசி

வார்த்தைகளை குறைவாக்கி வண்ண இதயங்களை பதிவாக்கி எண்களை தேடலாக்கி எண்ணங்களை நொடிகளாக்கி பொய்களை பரவலாக்கி பொம்மைகளை பதில்களாக்கி இயற்கை இசையை முடமாக்கி இன்னிசையை நிறைவாக்கி உலகை உள்ளங்கையாக்கி உறவுகளை தொலைவாக்கி கைகளை விலங்காக்கி கண்களை கைது செய்யும் மாய கண்ணாடி கைப்பேசி..!

வாழ்க்கைத் துணை

ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்.. அன்பிலும் ஆறுதலிலும் இன்பத்திலும் ஈர்ப்பிலும் உண்மையிலும் ஊடலிலும் எண்ணத்திலும் ஏற்பதிலும் ஐயம் நீங்குவதிலும் ஒத்துழைப்பதிலும் ஓடியுழைப்பதிலும் ஒளதாரியதிலும் வாழும் வரை இருப்பது வாழ்க்கை துணை மட்டுமே

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!