நடிப்பில் வாழ்ந்தவன் – முகமறியா முகநூல் நண்பர்

வாழ்க்கையில் நடிக்காமல் 

நடிப்பில் வாழ்ந்தவன் நீ 

உன்னை நடிகர் திலகம் என்றார்கள்

இல்லை

நீ நடிகர்களின் உலகம்….! 


உன் நாக்கில் பட்டு 

நகர்ந்த போதுதான் 

தமிழுக்கு தனிச்சுவை கூடியது….!


உன் உச்சரிப்பைக் கேட்டுத்தான் 

தமிழை 

ஒழுங்காய் பேசக் கற்றுக் கொண்டோம்….! 


உன் படங்கள் ஓடும் 

திரையரங்குகள் 

பள்ளிக் கூடங்களாகவே பார்க்கப்பட்டது….! 


உன் படங்களை பார்ப்பதற்கு

தமிழ் உலகம் 

குடும்பங்களோடு பயணப்பட்டது….! 


ஒவ்வொரு குடும்பமும்

உன்னை 

மூத்த மகனாய்த்தான் 

முன்னிறுத்தியது….!


முத்தமிழ் மணக்கும்

உன் நடிப்பு கண்டு

முக்கிய பிரச்சினைகளை அல்ல 

மனம் மூழ்கும் கவலைகளையும் 

பின்னிருத்தியது….!


உயிர்த் துடிப்புள்ள

உன் நடிப்பை 

உணர்ச்சியற்றவர்கள் 

ஓவர் ஆக்டிங் என்கிறார்கள்….! 


விருதுகளுக்கு விருந்து வைக்கும்

உன் நடிப்பின் 

வீரியம் கண்டு

விண்ணுக்கும் மண்ணுக்குமாய் 

வியப்பு வியாபித்திருக்கிறது ….!


நீ 

அரசியல் அறியாத அப்பாவி

எங்கள் ஆழ் மனம் ஆளும்

அன்பின் கைதி….! 


உன்னை

வணங்குகினற வாய்ப்பே 

எனக்கு வரம்….! 


உன்னை 

வாழ்த்துவதாலேயே உயரும்

தமிழின் தரம்…..!


Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!