வல்லரசு… நல்லரசு

 வல்லரசு… நல்லரசு

வல்லரசு… நல்லரசு

ராணுவ பலமும்

கண்டம் விட்டு கண்டம் பாயும் 

ஏவுகனைகளை

அடுக்கி வைத்திருக்கும்

நாடுமட்டும்…… “வல்லரசு”ஆகாது.

கஜானாவில் தங்கமும்

வைரமும் , குவித்து 

வைத்திருக்கும்

நாடு மட்டும்…… “வல்லரசு” ஆகாது

மாடமாளிகைகளும்

கூட கோபுரங்களும்

நிறைந்த 

நாடு..மட்டும்…… “வல்லரசு” ஆகாது…..

விளைநிலங்களும்

இயற்கை வளங்களும் 

நிறைந்த 

நாடுமட்டும்……. “வல்லரசு”ஆகாது.

அறிவாளிகளும்..

படைப்பாளிகளும்… நிறைந்த 

நாடுமட்டும்…… “வல்லரசு ஆகாது”.

இவைகளுடன்

எந்த நாட்டில்…

“அநாதை.. இல்லங்களோ”

“முதியோர்.. இல்லங்களோ”

இல்லாமல் உள்ளதோ

அனைவருக்கும் ஆதரவும்…………   

அரவணைப்பும்…..  

அவரவர் 

உறவினர்கள், நண்பர்கள் 

மூலமாக கிடைக்கிறதோ

அந்த நாடுதான்

இந்த உலகில்

“நிஜமான நல்லரசு”

“நிஜமான வல்லரசு”

“வாழ்வோம்..”

“வளர்வோம்.”

“வாழவைப்போம்”

“திரைப்பட நடிகர்”  கவிஞர் இளமுருகு

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...