Tags :பத்துமலை பந்தம்

தொடர்

பத்துமலை பந்தம் | 34 | காலச்சக்கரம் நரசிம்மா

34. ஆபத்துக்கு அடைக்கலம் கோலாலம்பூர் மில்லினியம் ஹோட்டலினுள் நுழைந்து, பார்க்கிங் ஏரியாவில் நின்ற கேப்-பில் இருந்து இறங்கிய மயூரி, ரிசப்ஷனுக்கு விரைந்தாள். சோபா ஒன்றில் அமர்ந்தபடி அவளுக்காகக் காத்திருந்தாள், கனிஷ்கா. “ஹாய் மயூரி..!” –என்றபடி எழுந்து நின்ற கனிஷ்கா அவளைத் தாவி அணைத்துக்கொண்டு முகத்தை அவளது தோளினில் புதைத்துக் கொண்டாள். மயூரியின் தோள்கள் தாமரையைப் போன்று விரிந்து, விலாப் பகுதியில் குறுகி, மீண்டும் இடையில் சற்றே விரிந்து, பாதங்களை நோக்கி மீண்டும் குறுகி, வளைவு நெளிவுகளோடு காணப்படும். […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 33 | காலச்சக்கரம் நரசிம்மா

33. பயணம் போனார்கள்..! பணயம் ஆனார்கள்..! பாத்டப்பின் ஹாண்ட் ஷவரில் இருந்து தண்ணீர் ‘சள சள’ என்று வெளியேறிக் கொண்டிருக்க, அதனை உணராமல் கண்ணாடியைப் பார்த்தபடி திகைத்து நின்றிருந்தாள் கனிஷ்கா. இவள் குளித்துக் கொண்டிருப்பது அபிக்கு எப்படித் தெரிய வந்தது..? பாத்ரூமில் கேமரா எதாவது வைத்திருக்கிறார்களா..? மருட்சியுடன் கண்களைச் சுற்றிலும் மேய விட்டாள். டெலிபோன் இணைப்பு எண்ணை வைத்து அபி இவள் பாத்ரூமில் இருப்பதை யூகித்திருக்கலாம். அப்பா சரவணப்பெருமாள், அவர்கள் பயங்கரமானவர்கள் என்று சொல்லித்தான் அனுப்பியிருநதார் என்றாலும், […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 32 | காலச்சக்கரம் நரசிம்மா

32. நாலு பக்கம் ஏரி..! ஏரியில தீவு..! மயூரி அந்த ஒற்றையடிப் பாதையில் தொடர்ந்து நடந்தாள். சற்றுத் தொலைவில் குமுதினியும், குனோங்கும் பின்தொடர குகன்மணி அந்தப் பாதையில் விரைந்து கொண்டிருந்தான். தொலைவில் இருந்த சிறு குன்றின் உச்சியில், விண்ணில் மிதந்து வந்த ஒளிவட்டங்கள் இறங்கியதன் அடையாளமாக ஒருவித ஒளி பரவியிருந்தது. குகன்மணிக்கும் அவற்றிற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்..? குமுதினி, குனோங் இருவரையும் அழைத்து கொண்டு, இந்த இரவு வேளையில் எங்கே அவசரமாக செல்கிறான்..? சிறிது தொலைவே […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 30 | காலச்சக்கரம் நரசிம்மா

30. விமானப்படிகளில் விபரீத செய்தி  “தகையோன்-னா தகுதி உடையவன். தகுதி உடையவர்களால மட்டுமே ஏற முடிஞ்ச மலை..! இப்ப அந்த மலையோட பெயர் என்ன தெரியுமா..?” –குகன்மணி கேட்க, மயூரி ஆவலுடன் அவன்  முகத்தைப் பார்த்தாள். மலேசியா ஏர்லைன்ஸ்ஸில் பணிபுரிவதால், மலேசியாவின் முக்கிய இடங்களைப் பற்றி அறிந்திருந்தாளே தவிர அதன் இயற்கை மர்மங்களைப் பற்றி இதுவரை ஒன்றும் அறிந்திருக்கவில்லை.  “இப்ப அந்த மலைக்கு குனுங் தகான்-னு பெயர். குனுங்-னா மலை. மலேசியாவோட உயரமான மலை. மலை முழுக்க அடர்ந்த […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 29 | காலச்சக்கரம் நரசிம்மா

29. நாலும் தெரிந்த நாயகன்  “கெலவர் குகை என்றால் வௌவால் குகையாமே..! அங்கே என்ன ஆச்சரியம் காத்திருக்கிறது..?” –யோசனையுடன் நடந்தாள், மயூரி. “நமக்கு , எல்லாம் தெரியும்னு இறுமாந்து உலகமே நம்ம பாக்கெட் உள்ளேன்னு நினைச்சுகிட்டு இருக்கோம் . இந்த பத்து மலை எல்லாம் நாற்பது கோடி ஆண்டுகள் பழமையானது. பத்து-னா மலயா மொழியில சுண்ணாம்பு னு சொல்லியிருக்கேன். இந்த சுண்ணாம்புக்குப் பின்னாடி எவ்வளவோ விஷயங்கள் இருக்கு தெரியுமா ? அகஸ்தியர்,போகர், கோரக்கர், எல்லாம் ஏன் இங்கே வந்து வாசம் செய்தாங்க னு நினைக்கிறே..? அமைதியா […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 28 | காலச்சக்கரம் நரசிம்மா

28. மலையுச்சியில் வௌவால் மேடு பத்துமலை முருகனை மனங்குளிரத் தரிசித்தாள் மயூரி. மனதின் ஒரு மூலையில் கலக்கம் தோன்றிக்கொண்டிருந்தது. உலகில் இப்போதைக்கு இவள் தனிமைப்பட்டு நிற்கிறாள். மூன்றாவது நவபாஷாணச் சிலையை தேடத் தொடங்கியிருக்கும், தனது குடும்பத்தாரின் செயலுக்கு ஆதரவு தர மறுத்ததால், அவர்களாலேயே குறி வைக்கப்பட்டு இருக்கிறாள். நவபாஷாணச் சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த நீரை உட்கொண்டால், உடலில் ஆரோக்கியம் நிலவும் என்பது பொதுப்படையாக அனைவருக்கும் சொல்லப்பட்ட அறிவுரை. ஆனால் நவபாஷாணச் சிலையின் மகத்துவம் அதோடு நிற்கவில்லை […]Read More

கைத்தடி குட்டு தொடர்

பத்துமலை பந்தம் | 27 | காலசச்சக்கரம் நரசிம்ம

27. குகன்மணி ஓர் அபாய மணி அண்டர்வேர்ல்ட் மன்னன் அமீர் அனுப்பிய ஆட்கள், அலட்சியமாக மலேசியன் மில்லினியம் ஹோட்டலினுள் நுழைந்தபோது, ஜெனரல் மேனேஜர் நூர் பாசில் அதிர்ந்து போனார். அவசரமாக தனது அறையில் இருந்து வெளியேறி ரிசப்ஷன் பக்கமாக சென்று, அங்கு பொறுப்பில் இருந்த பமீலாவிடம் கண்ணசைத்தார். “ஜாக்கிரதை..! ஆமீர் ஆட்கள் வர்றாங்க. எதுக்கு வர்றாங்கன்னு தெரியலை..! . நல்லபடியாகப் பேசி அனுப்பு. ஹொட்டலையே வெடிகுண்டு வைத்து தகர்க்கக் கூடியவங்க. பாரிஸ் வெடிகுண்டுகளே இவர்களின் கையில் இருக்கு..!” […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 26 | காலச்சக்கரம் நரசிம்மா

26. வீட்டுச் சிறையில் மயூரி தொழிலதிபர் சரவணப்பெருமாள் குடும்பம் காலை டிபன் உண்டு கொண்டிருந்தனர். வழக்கம் போல் கனிஷ்கா, பாலில் கார்ன் பிளக்ஸ்-சை மிதக்க விட்டு, ஸ்பூனால் ஒவ்வொன்றாக எடுத்து வாயினுள் தள்ளிக் கொண்டிருந்தாள். தேஜஸ் பேப்பரை படித்துக்கொண்டே, நூடுல்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன், வெறுப்புடன் இடதுகையால் பேப்பரை விசிறி எறிந்தான். “போச்சு..! இனிமே ராஜஸ்தான் ராயல்ஸ் என்னை திரும்பி பார்க்கும்னு தோணலை. புது பையன்க நல்லாவே ஆடிட்டு வராங்க..!” –தேஜஸ் கூற, கனிஷ்கா தந்தையைக் கேள்வியுடன் பார்த்தாள். […]Read More

தொடர்

அஷ்ட நாகன் – 10| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்- நாக வழிபாடு, சூரிய வழிபாடு போலவே உலகம் முழுவதும் பரவியிருந்தது. நம் பாரத நாட்டில் வட மாநிலங்களில் உள்ள காஸ்மீர் பள்ளத்தாக்குகளில் ‘காங்கரா’ மற்றும் ‘சாம்பா’ பகுதியிலுள்ள கோயில்களில் சாந்தன நாகம், இந்துரு நாகம், கார்ஷ் நாகம், கார்க்கோடக நாகம், சாபிர் நாகம், பிரிதம் நாகம், டாகட் நாகம், பசக் நாகம் மற்றும் சேஷ நாகம் முதலிய நாகங்கள் மனித உருவில் வணங்கப்படுகின்றன. நாகங்களில் பெரிய பாம்புகளை விட, சிறிய பாம்புகளே ஆபத்தானவை.பெரிய வகை […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 25 | காலச்சக்கரம் நரசிம்மா

25. இரண்டில் ஒன்று, என்னிடம் சொல்லு..! போதினியும், சுபாகரும், குகன்மணியிடம் பணிபுரியும், குனோங் மற்றும் குமுதினியின் வாரிசுகள் என்பதை அறிந்துகொண்டதும், எல்லாமே குகன்மணி அரங்கேற்றும் நாடகம் என்பதை உணர்ந்தாள் மயூரி. சுபாகரும், மயூரியும், பண்ணை வீட்டு மாடி அறையில் இவளது குடும்பத்தினர் பேசியதை ரகசியமாக பதிவு செய்ய பட்டன் மைக் எதையாவது பொருத்தியிருக்க வேண்டும். இல்லையென்றால், குகன்மணியால் இவர்கள் பேசியதை எப்படி சரியாக யூகிக்க முடியும்..? குகன்மணி மிகவும் ஆபத்தானவன். அவனது முருக பக்திகூட, ஒரு புகைத்திரையாகத்தான் […]Read More