Tags :சாய்ரேணு

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 18 | சாய்ரேணு

17. ரூபாய் “கோஷ் டாம் இட்!” என்றாள் தன்யா. எல்லா கேபின்களும் வெளியே தாழிடப்பட்டிருந்தன. “டாய்லெட்” என்று பாய்ந்தாள் தன்யா. அங்கே யாருமில்லை. ஆனால்… திட்டுத் திட்டாக ரத்தம். “மை… காட்…” என்று பதறிய தன்யா “டைனிங்-கார்…” என்று அக்கதவைத் தள்ளினாள். பாத்ரூமுக்கும் டைனிங்காருக்கும் இடைப்பட்ட சிறிய பகுதியில் தரையில் அமர்ந்து பெரிய பெரிய மூச்சுகளாக வாங்கிக் கொண்டிருந்தான் தர்மா. “என்ன பண்ணிட்டிருக்க இங்கே? இதுதான் காவல் காக்கிற லட்சணம்!” பொரிந்தாள் தன்யா, தன் பதட்டத்தை மறைக்குமுகமாக. […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 17 | சாய்ரேணு

16. காப்பிட்ட பெட்டி “லாக்கர்ஸ்” என்றாள் ஸ்ரீஜா. “இதை நான் முதலிலேயே யோசிச்சிருக்கணும்.” தன்யாவும் தர்ஷினியும் மௌனமாக அவள்கூட நடந்தார்கள். “அதுதான் மறைவானது, அதுதான் பாதுகாப்பானது, அதுதான் நீங்க தேடாதது” – தொடர்ந்தாள் ஸ்ரீஜா. தர்மா சற்றுப் பின்னால் நடந்தான். அவன் கண்கள் பரபரவென்று அலைந்தன. எல்லோரும் டைனிங் காரில் இருக்கிறார்கள், கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும்… தன்யா கொலைகாரனை நெருங்கிவிட்டாள் என்ற செய்தி இதற்குள் அந்த நபருக்கு எட்டியிருக்கும். பொறியில் அகப்பட்ட எலி நார்மலாக நடந்துகொள்ளாது. அங்குமிங்கும் […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 16 | சாய்ரேணு

15. படுக்கை கீழ்ப் பர்த்தில் விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் இராணி கந்தசாமியின் முகம் அமைதியாக, தெளிவாக இருந்தது. அவள் நெஞ்சில் தெரிந்த செந்நிற ஓட்டையை விட்டுவிட்டால், அவள் நிம்மதியாகத் தூங்குவது போலவே தோன்றும். “டேம் யூ, இடியட்ஸ்” என்றாள் ஸ்ரீஜா, தன்யாவும் தர்ஷினியும் உள்ளே நுழைந்ததும். குனிந்து இராணி கந்தசாமியின் உடல்மீது பார்வையைப் போட்டிருந்த தன்யா “வாட் டு யூ மீன்?” என்றாள் அமைதியாக. “உங்களைத்தான் சொன்னேன். நியாயமா பார்த்தா நான் என்னைச் சொல்லிட்டிருக்கணும்! உங்களை நம்பி இவ்வளவு […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 15 | சாய்ரேணு

14. கோவணம் “ஏதோ ஒரு ஊரில் கோவணம் கட்டியவன் முட்டாள்னு சொல்வாங்க. நான் அப்படி ஒரு முட்டாள்” என்று ஆரம்பித்தார் சந்திரசேகர். ஏனோ தன்யாவுக்கு அவரிடம் கேள்விகள் போடத் தோன்றவில்லை. மௌனமாகவே இருந்தாள், அவராகவே பேசட்டும் என்று. “சங்கர்-ஸ்ரீனி அஸோஸியேட்ஸ்க்கும் முன்னால், சங்கருடைய அப்பா நடத்திட்டிருந்த காம்-கெம்ஸில் நான் முதன்முதலா ட்ரெய்னியா சேர்ந்தேன்… அந்த ஃபாக்டரி மூடப்படறதைப் பார்க்கற துரதிர்ஷ்டம் எனக்கு இருந்தது. அப்புறம் கொஞ்சநாள் கெம்ஃபாப் ஆல்கலீஸ்ல வேலை பார்த்தேன். சங்கரும் ஸ்ரீனியும் சேர்ந்து இண்டஸ்ட்ரி […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 14 | சாய்ரேணு

13.செருப்பு தன்னை யாரோ செருப்பால் அடித்துவிட்டது போன்ற வலியில் தேவசேனாபதி அயர்ந்து அமர்ந்திருக்க, அதைக் கவனிக்காமல் தர்மா தத்துவம் பேச ஆரம்பித்தான். “ஒரு ஆணுக்கு மிக முக்கியமானது அவனுடைய பர்ஸ். அதே போலப் பெண்களுக்கு ஹேண்ட்-பேக். அவர்களுடைய பர்சனாலிட்டியின் ஒரு பாகம் அது. சொல்லப் போனால் ஒருவருடைய அவருடைய பர்ஸ் அல்லது ஹேண்ட்-பேக் அவருடைய குணங்களின் கண்ணாடி என்றே சொல்லலாம். “சாதாரணமாக, பர்ஸ் என்பது நம்முடைய பணம் ப்ளஸ் நம்மை அடையாளம் காட்டும் டாக்குமெண்ட்ஸ் இவைகளைத்தான் பிரதானமாகக் […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 12 | சாய்ரேணு

12. சால்வை ட்ரெயினில் கொடுக்கப்பட்டிருந்த சால்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு கலிவரதனும் காமுப் பாட்டியும் அமர்ந்திருந்தார்கள். “நமஸ்காரம்” என்றவாறே உள்ளே நுழைந்தார்கள் தர்மா, தன்யா, தர்ஷினி. கலிவரதன், காமுப் பாட்டி இருவரும் தங்கள் கேபினிலேயே அவர்களைச் சந்திப்பதாகச் சொல்லிவிட்டதால் இங்கே வந்திருக்கிறார்கள். “வாங்கோ” என்றாள் காமுப் பாட்டி. கலிவரதன் லேசாகத் தலையை மட்டும் அசைத்தார். ஆரம்ப அறிமுகங்கள் முடிந்ததும் “சுப்பாமணி – அவரைப் பற்றிச் சொல்லுங்கோ” என்று கேட்டுக் கொண்டாள் தன்யா. காமுப் பாட்டி ஏதோ பேச […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 12 | சாய்ரேணு

11.கவிகை வெளியே மழை குறைந்திருந்தது. ஆனாலும் அது தற்காலிகம்தான் என்று உணர்த்துவதுபோல, மேகங்கள் வானம் முழுக்கக் குடை கவித்திருந்தன. தன் கூப்பேக்குப் போயிருந்த ஸ்ரீஜா இப்போது மீண்டும் டைனிங் காருக்குள் நுழைந்தாள். முகம் கழுவி, கொஞ்சம் மேக்கப் போட்டிருந்தாள். “என்ன, எப்படிப் போயிட்டிருக்கு?” என்று கேட்டாள். “பார்க்கலாம், இப்பதானே ஆரம்பிச்சிருக்கு” என்றாள் தன்யா. “இப்போ அடுத்து என்ன செய்யப் போறீங்க?” என்று கேட்டாள் ஸ்ரீஜா. “ஒரு நூலைப் பிடிச்சுக்கிட்டு அது எங்கெல்லாம் போகிறதோ அங்கெல்லாம் போனா, சிக்கல் […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 10 | சாய்ரேணு

10. தீப்பெட்டி “கான் ஐ ஸ்மோக்?” என்றவாறே பதிலுக்குக் காத்திராமல் சிகரெட்டைப் பற்ற வைத்தான் ப்ரிஜேஷ். அவனருகில் அமர்ந்திருந்த ஸ்ரீகாந்த், அஜய் இருவரும் பயம் ஒருபுறம், ஆர்வம் ஒருபுறம் என்று இருதலைக்கொள்ளி எறும்புகளாய்த் தவித்தனர். ப்ரிஜேஷிடம் அத்தகைய தவிப்பு எதுவும் இல்லை. தன்யா, தர்மா, தர்ஷினி அவன் எதிரில் அமர்ந்திருந்தார்கள். மௌனமாக அவனையே பார்த்தார்கள். “வெல்?” என்று ப்ரிஜேஷே மறுபடி பேச்சைத் தொடக்கினான். “சின்ன ஏரியா இந்த டைனிங் கார். ஏர்-கண்டிஷண்ட் கோச். இங்கே ஸ்மோக் பண்றதுக்கு […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 9 | சாய்ரேணு

9. தாள்-பென்சில் அலையலையாய் அதிர்ச்சி தாக்க, அருகிலிருந்த நாற்காலியில் பொத்தென்று அமர்ந்தார்கள் தர்மாவும் தர்ஷினியும். “அந்த… ட்ராக்கில் கிடக்கறதாச் சொன்னது… சுப்பாமணியா?” விழிகள் விரியக் கேட்டாள் தர்ஷினி. “சு… சுப்பாமணி… எப்படி? நீங்க… உங்களுக்கு…” என்று தடுமாறினான் தர்மா. தன்யா “ஆப்வியஸ்” என்றாள் சோர்வான குரலில். “நாம நினைச்சது தப்பு. அவங்களை வந்து அழைச்சுப் போனது உண்மையான ரயில்வே அதிகாரி தான்” என்றாள். “ஹௌ கான் இட் பீ..? ஓங்கோல் ஸ்டேஷன்ல யாருக்குமே ஒரு அதிகாரி வந்ததோ, […]Read More

தொடர்

பயணங்கள் தொடர்வதில்லை | 8 | சாய்ரேணு

8. தூக்குக் கூஜா ப்ரிஜேஷும் அவர்களைப் பார்த்துவிட்டான். பார்த்தான் என்பதைவிட, அவனுடைய கண்கள் அவர்கள் மீது படிந்து விலகின என்று சொல்வதே நிஜம். அவனுக்கு அவர்களை அடையாளம் தெரியவில்லை. யாரையும் அடையாளம் தெரிந்துகொள்ளும் மனநிலையிலும் அவன் இல்லை. கையில் சிறிய பக்கெட் போல் ஏதோ இருந்தது. அதை மட்டும் இறுகப் பிடித்திருந்தான். தர்ஷினி அவனை விடுவதாக இல்லை. வேகமாக நடந்து அவனுக்கு நேரே சென்று நின்றுகொண்டாள். “ப்ரிஜேஷ்! இங்கே என்ன பண்றீங்க? எப்போ ட்ரெயின்லேர்ந்து இறங்கினீங்க? ஸ்ரீஜாவைப் […]Read More