வரலாற்றில் இன்று ( 30.04.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஏப்ரல் 30 கிரிகோரியன் ஆண்டின் 120 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 121 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 245 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

313 – உரோமைப் பேரரசின் மன்னன் லிசீனியஸ் அனைத்து கிழக்கு உரோமைப் பேரரசையும் ஒன்றாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.
1006 – மிகவும் ஒளி கூடிய சுப்பர்நோவா எஸ்.என் 1006 லூப்பஸ் என்ற விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது.
1483 – இந்த நாளில் புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்துள் வந்தது. இது 1503 சூலை 23 வரை அங்கு இருந்தது.
1492 – எசுப்பானியா கிறித்தோபர் கொலம்பசுக்கு நாடுகளைக் கண்டுபிடிப்பதற்கான தனது ஆணையை வழங்கியது.
1513 – ஆங்கிலேய முடியாட்சிக்குப் போட்டியிட்ட சஃபோல்க் இளவரசர் எட்மண்ட் டெ லா போல் எட்டாம் என்றியின் ஆணைப்படி தூக்கிலிடப்பட்டார்.
1636 – எண்பதாண்டுப் போர்: இடச்சுக் குடியரசுப் படைகள் எசுப்பானியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையை ஒன்பது மாத முற்றுகையின் பின்னர் கைப்பற்றினர்.
1789 – நியூயோர்க்கின் வால் ஸ்ட்ரீட், பெடரல் மாளிகையின் மேன்மாடத்தில் இருந்து சியார்ச் வாசிங்டன் அமெரிக்காவின் 1வது குடியரசுத் தலைவராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
1803 – லூசியானா வாங்கல்: ஐக்கிய அமெரிக்கா லூசியானா மாநிலத்தை பிரான்சிடம் இருந்து 15 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது.
1812 – லூசியானா அமெரிக்காவின் 18வது மாநிலமாக இணைந்தது.
1838 – நிக்கராகுவா மத்திய அமெரிக்கக் கூட்டமைப்பில் இருந்து விடுதலையை அறிவித்தது.
1870 – இலங்கை, புறக்கோட்டையில் முசுலிம்களின் கலவரம் இடம்பெற்றது.[1]
1897 – ஜெ. ஜெ. தாம்சன் அணுவடித்துகளாக இலத்திரனைக் கண்டுபிடித்ததாக இலண்டனில் அறிவித்தார்.
1900 – அவாய் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பகுதியானது.
1937 – பிலிப்பீன்சு பொதுநலவாயம் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவது குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது. 90 விழுக்காட்டினர் ஆதரவாக வாக்களித்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: இட்லர் தனது மனைவி இவாவுடன் பியூரர் பதுங்கு அறையில் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படைகள் பெர்லினில் செருமனிய நாடாளுமன்றில் செங்கொடியை ஏற்றினர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் பார்த் நகரில் போர்க்கைதிகள் முகாமில் இருந்து 9000 அமெரிக்க-பிரித்தானியப் படையினரை சோவியத் செம்படை விடுவித்தது.
1948 – கொலம்பியாவின் பொகோட்டா நகரில் அமெரிக்க நாடுகள் அமைப்பு உருவானது.
1955 – இந்திய இம்பீரியல் வங்கியின் பெயர் பாரத ஸ்டேட் வங்கி என மாற்றம் செய்யப்பட்டது.
1961 – கே-19 என்ற முதலாவது சோவியத் அணுக்கரு ஆற்றல் மூலம் இயங்கும் நீர்முழ்கி கப்பல் சேவைக்கு விடப்பட்டது.
1975 – வியட்நாம் போர்: கம்யூனிசப் படைகள் சாய்கோன் நகரைக் கைப்பற்றினர். தென் வியட்நாமியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்ததில் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது.
1980 – யூலியானா முடிதுறந்ததை அடுத்து பீட்ரிக்சு நெதர்லாந்தின் அரசியாக முடிசூடினார்.
1980 – இலண்டனில் ஈரானியத் தூதரகத்தை முற்றுகையிட்ட தெற்கு ஈரானியப் போராளிகள் அங்கிருந்த பலரை பனயக் கைதிகளாகப் பிடித்தனர்.
1982 – திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1982 – இந்தியாவின் மேற்கு வங்கத்தில் ஆனந்த மார்க்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த 17 துறவிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
1991 – யாழ்ப்பாணம் நீராவியடியில் நிகழ்ந்த வெடி விபத்தில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
1993 – உலகளாவிய வலையின் நெறிமுறைகள் கட்டற்றதாக இருக்கும் என ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்தது.
1999 – ஆசியான் அமைப்பில் கம்போடியா இணைந்து கொண்டது.
2006 – ஆப்கானித்தானில் தலிபான்களால் கடத்தப்பட்ட சூரியநாராயணா என்ற இந்தியப் பொறியியலாளர் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
2008 – உருசியாவின் கடைசிப் பேரரசர் இரண்டாம் நிக்கொலாசின் பிள்ளைகளான இளவரசர் அலெக்சி, இளவரசி அனஸ்தாசியா ஆகியோரின் உடல் எச்சங்கள் உருசியாவின் எக்கத்தரீன்பூர்க் நகரில் கண்டுபிடிக்கப்பட்டன.
2009 – நெதர்லாந்தில் அரசி பீட்ரிக்சு மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதில், ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 10 பேர் காயமடைந்தனர்.
2012 – இந்தியாவில் பிரம்மபுத்ரா ஆற்றில் பயணிகள் படகொன்று கவிழ்ந்ததில் 103 பேர் உயிரிழந்தனர்.
2013 – நெதர்லாந்தில் பீட்ரிக்சு முடிதுறந்ததை அடுத்து, வில்லியம்-அலெக்சாந்தர் மன்னராக முடிசூடினார்.

பிறப்புகள்

1777 – கார்ல் ஃப்ரெடெரிக் காஸ், செருமானியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1855)
1870 – தாதாசாகெப் பால்கே, இந்திய இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1944)
1902 – தியாடர் சுலட்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 1998)
1909 – யூலியானா, நெதர்லாந்து அரசி (இ. 2004)
1916 – கிளாடு சேனன், அமெரிக்கக் கணிதவியலாளர், பொறியியலாளர் (இ. 2001)
1920 – கெர்டா லெர்னர், ஆத்திரிய யூத-அமெரிக்க வரலாற்றாளர், எழுத்தாளர் (இ. 2013)
1935 – ஜக்தேவ் சிங் ஜசோவால், பஞ்சாப் எழுத்தாளர், இலக்கியவாதி (இ. 2014)
1943 – பிரெடிரிக் சிலுபா, சாம்பியாவின் 2வது அரசுத்தலைவர் (இ. 2011)
1949 – அந்தோனியோ குத்தேரசு, போர்த்துகலின் 114வது பிரதமர்
1959 – இசுட்டீவன் கார்ப்பர், கனடாவின் 22வது பிரதமர்
1964 – டோனி பெர்னாண்டஸ், மலேசிய-இந்தியத் தொழிலதிபர்
1979 – ஹரிணி, தென்னிந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகி
1981 – குணால் நாயர், பிரித்தானிய-இந்திய நடிகர்

இறப்புகள்

1030 – கசினியின் மகுமூது (பி. 971)
1735 – ஜேம்சு புரூசு, உருசிய அரசியலாளர், படைத்துறைத் தலைவர் (பி. 1669)
1883 – எடுவார்ட் மனே, பிரான்சிய ஓவியர் (பி. 1832)
1945 – இட்லர், செருமனியின் அரசுத்தலைவர் (பி. 1889)
1945 – இவா பிரான், அடால்ப் இட்லரின் மனைவி
1945 – கா. சு. பிள்ளை, தமிழகத் தமிழறிஞர், சைவசித்தாந்த, சட்ட அறிஞர், உரையாசிரியர் (பி. 1888)
1961 – லோங் அடிகள், யாழ்ப்பாணத்தில் பணி புரிந்த அயர்லாந்து மதகுரு (பி. 1896)
1987 – சிதம்பர பாரதி, தமிழக அரசியல்வாதி (பி. 1905)
1989 – செர்சோ லியோனி, இத்தாலிய இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1929)
2001 – நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1924)
2011 – தோர்ச்யீ காண்டு, அருணாச்சலப் பிரதேசத்தின் 6வது முதலமைச்சர் (பி.

சிறப்பு நாள்

வியட்நாம் ஒருங்கிணைப்பு நாள் (வியட்நாம்)
ஆசிரியர் நாள் (பரகுவை)
தந்தையர் தினம் (செருமனி)
குழந்தைகள் நாள் (மெக்சிக்கோ)
மாவீரர் நாள் (பாக்கித்தான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!