அதிக வருவாய் ஈட்டிய ரயில் நிலையங்களின் பட்டியலை வெளியிட்டது தெற்கு ரயில்வே..!

 அதிக வருவாய் ஈட்டிய ரயில் நிலையங்களின் பட்டியலை வெளியிட்டது தெற்கு ரயில்வே..!

கடந்த நிதியாண்டில் அதிக வருவாய் ஈட்டி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தென்னக ரயில் நிலையங்களில் முதலிடம் பிடித்துள்ளது.

உலகிலியே  மிகப்பெரிய ரயில் வழித்தடங்கள் இந்தியாவில் உள்ளது. கிட்டதட்ட 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்வே நிலையங்கள் இந்தியா முழுவதும் உள்ளன. தினம் தினம் லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுவதும் ரெயிலில் பயணம் செய்கிறார்கள். இந்தியாவிலேயே அதிக வருமானம் வரும் துறையாக ரயில்வே இருந்து வருவதால் ரயிவேக்கு தனி பட்ஜெட்டே தாக்கல் செய்யப்படுகிறது.

அன்றாடம் பொதுப் போக்குவரத்துகளில் ரயிலை பயன்படுத்துவோர் அதிகம். ரயில் மூலம் சரக்கு போக்குவரத்திலும் அந்த துறை லாபம் ஈட்டி வருகிறது. இந்த நிலையில் 2024ம் ஆண்டிற்கான ரயில்வே துறையில் ஆண்டு வருவாய் குறித்த தகவலை பொதுத் தளத்தில் இந்திய ரயில்வே வெளியிடுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு மண்டலங்களும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலையங்களின் பட்டியல்களை வெளியிட்டுள்ளது.

2024ஆம் நிதியாண்டில் தென்னக ரயில்வேக்கு 12 ஆயிரத்து 20 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. பயணிகளிடமிருந்து ரயில் கட்டணமாக 7 ஆயிரத்து 151 கோடி ரூபாயும், சரக்கு ரயில் கட்டணம் மூலம் 3 ஆயிரத்து 674 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த பட்டியலில் முதலிடம் பிடித்த ரயில் நிலையம் தமிழ்நாட்டின் முக்கியமான ரயில் நிலையமாக கருதப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையத்தின் வருவாய் ஆயிரத்து 215 கோடியே 79 லட்ச ரூபாய் ஆகும். இதன் மூலம் தென்னக ரயில்வே ரயில் நிலையங்களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதலிடம் பிடித்துள்ளது

இதேபோல சென்னை எழும்பூர் ரயில் நிலையம் இரண்டாம் இடத்திலும், கோவை ரயில் நிலையம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.  திருவனந்தபுரம் நான்காவது இடத்திலும், தாம்பரம் ஐந்தாம் இடத்திலும், எர்ணாகுளம் ஆறாம் இடத்திலும் உள்ளன.

அதேபோல மதுரை ஏழாம் இடத்தையும், கோழிக்கோடு எட்டாவது இடத்தையும், திருச்சூர் ஒன்பதாம் இடத்தையும், திருச்சி ரயில் நிலையம் இந்த பட்டியலில் 10வது இடத்தையும் பிடித்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...