மூத்த குடிமக்களுக்கான மத்திய அரசு மருத்துவ காப்பீடு..!
தன்வந்தரி ஜெயந்தி மற்றும் 9-வது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் கூடுதலாக, 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்குமான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். வருமான அளவைப் பொருட்படுத்தாமல் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பை வழங்க இந்த திட்டம் உதவும்.
தன்வந்தரி ஜெயந்தி மற்றும் 9-வது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் சுமார் ரூ .12,850 கோடி மதிப்புள்ள சுகாதாரத்துறை தொடர்பான பல திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
மேலும் ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் கூடுதலாக, 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பை விரிவுபடுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். வருமான அளவைப் பொருட்படுத்தாமல் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பை வழங்க இது உதவும்.
ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மணிப்பூர், தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய இடங்களில் 21 தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூரில் உள்ள பல்வேறு வசதிகள் மற்றும் சேவை விரிவாக்கங்கள் ஆகியவை அடங்கும்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஈஎஸ்ஐசி மருத்துவமனையைத் தொடங்கி வைப்பதுடன், ஹரியானா மாநிலத்தில் ஃபரிதாபாத், கர்நாடகாவில் பொம்மசந்திரா,நரசாபூர், மத்தியப் பிரதேசத்தில் இந்தூர், உத்தரப் பிரதேசத்தில் மீரட், ஆந்திரப் பிரதேசத்தில் அச்சுதபுரம் ஆகிய இடங்களில் ஈஎஸ்ஐசி மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டங்கள் சுமார் 55 லட்சம் இஎஸ்ஐ பயனாளிகளுக்கு சுகாதார பலன்களை அளிக்கும்.