இந்தா வந்துட்டோம்லனு கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட ஜூலி பிக் பாஸ் முதல் சீசனில் பங்கேற்றதன் மூலம் பலரின் வெறுப்பை சம்பாதித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் நெட்டிசன்கள் இன்னும் ஜூலியை கலாய்ப்பதை விட்ட பாடில்லை. அந்த பெண் புகைப்படமோ, வீடியோவோ வெளியிட்டால் குஷியாகி கலாய்க்கிறார்கள். இந்நிலையில் தான் ஜூலி ஆசை, ஆசையாய் அந்த வீடியோவை வெளியிட்டார். பிரேமம் படத்தில் சாய் பல்லவிக்காக நிவின் பாலி பாடிய பாடலை பயன்படுத்தி ஜூலி அழகாக ஒரு வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார். அதை பார்த்த நெட்டிசன்களோ, ஜூலிக்கு மனசுல சாய் பல்லவின்னு நினைப்பு என்று கிண்டல் செய்துள்ளனர்.
https://twitter.com/i/status/1212998793211174915
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் வந்த வசனத்தை எல்லாம் ஜூலிக்கு பயன்படுத்தி விமர்சித்துள்ளனர். பிக் பாஸ் வீட்டில் ஏதோ பொய் சொல்லிவிட்டார் என்பதற்காக ஆண்டுக் கணக்கிலா அவரை கலாய்ப்பது. பாவம்யா ஜூலி, விட்டுடுங்கய்யா. ஏதோ ஆசைப்பட்டு வீடியோ வெளியிட்டார். அதற்குப் போய் இப்படியா மிரட்டுவது?. ட்விட்டரில் டிஸ்லைக் பட்டன் இல்லாத தைரியத்தில் வீடியோ வெளியிடுகிறீர்கள் ஜூலி. ட்விட்டர் நிர்வாகம் உடனடியாக டிஸ்லைக் பட்டனை அறிமுகம் செய்ய வேண்டும் என்று சிலர் கலாய்த்துள்ளனர். சிலரோ நான் பார்த்த இந்த கொடுமையை அனைவரும் பார்க்க வேண்டும் என்று ரீட்வீட் செய்ததாக தெரிவித்துள்ளனர். எப்படி எல்லாம் டிசைன், டிசைனா யோசிக்கிறாங்க.
