தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்திற்கு ஆரஞ்சு அலர்ட்..!
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், சேலம், நாமக்கல், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இன்று தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நாளை தேனி, திண்டுக்கல், கோவை, கரூர், மதுரை, திருச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நாளை மறுநாள் தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.