தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு மாஸ் ஏற்பாடு..!

 தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு மாஸ் ஏற்பாடு..!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடைபெற இருக்கிறது. மாநாட்டுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதுவரை அரசியல் கட்சிகள் நடத்திய மாநாடுகளில் இல்லாத பல சிறப்பு ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர், ‘தலைவர்’ விஜய்யின் யோசனைப்படி செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய். இதனையடுத்து மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

தற்போது மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்வுகள், சுவர் விளம்பரம், போஸ்டர்கள் என தமிழக வெற்றிக் கழகத்தினர் விளம்பர பணிகளை செய்து வருகின்றனர். மேலும் மாநாட்டுக்கு ஆட்களை அழைத்துச் செல்வதற்காக வாகனங்களை முன்னதாகவே அட்வான்ஸ் கொடுத்து புக் செய்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று புஸ்ஸி ஆன்ந்த் மாநாடு தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இதுவரை அரசியல் கட்சிகள் நடத்திய மாநாடுகளில் இல்லாத பல சிறப்பு ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர், ‘தலைவர்’ விஜயின் யோசனைப்படி செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மாநாட்டிற்கு இலட்சக்கணக்கானோர் வருவார்கள் என்பதால் சுமார் 500-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை அமைத்து மாநாட்டு நிகழ்வுகள் முழுவதையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும் மாநாட்டில் யாராவது தவறினால் அல்லது வேறு பகுதிக்கு சென்று விட்டால் அவர்களை கண்டுபிடித்து தரவும் காணாமல் போனவர்களை அணுகுவதற்கும் ‘மிஸ்ஸிங் ஜோன் உதவி மையங்கள்’ மாநாட்டு திடல் பகுதிகளிலும், நான்கு பார்க்கிங் ஏரியா பகுதிகளிலும் அமைக்கப்படுகிறது.

மாநாட்டில் வருபவர்கள் அனைவருக்கும் தேவையான கழிப்பிட வசதி, இருக்கைகளுக்கு அருகே தேவையான அளவுக்கு குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மாநாட்டு திடல் மற்றும் பார்க்கின் பகுதியில் மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், உதவியாளர்கள் பணியில் இருக்கிறார்கள் யாருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டாலும் உடனடியாக அவர்களை அணுகலாம். அதுமட்டுமில்லாமல் மருத்துவ குழுவினர், ஆம்புலன்ஸ் குழுவினர், கண்காணிப்பு குழுவினர், வரவேற்பு குழுவினர் என அனைவருக்கும் தனித் தனியாக ஒரே நிற சீருடை வழங்கப்பட இருக்கிறது.

மாநாட்டுக்கு மொத்தம் ஐந்து நுழைவு வாயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிலையில் வெளியேறுவதற்காக 15 வாயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் மாநாட்டுக்கு அனைவரும் வரவும் அல்லது வெளியேறவும் வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

வழக்கமாக மாநாட்டுக்கு ஒரே பார்க்கிங் வசதி தான் செய்யப்படும். ஆனால் தமிழக வெற்றிக்கழக மாநாட்டுக்கு சுமார் 4 பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது. 22ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை மாநாட்டுப் பகுதிக்கு நிர்வாகிகள் தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் எனவும் 27ஆம் தேதி காலை மாநாட்டுக்கு வந்தால் போதும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படியாக இதுவரை பல அரசியல் கட்சிகள் மாநாடு நடத்தி இருந்தாலும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வித்யாசமாகவும் அதே நேரத்தில் சிறப்பாக கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என விஜய் உத்தரவிட்டிருக்கிறார். இதற்காக பார்த்து பார்த்து ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...