வரகு – ராகி தோசை

 வரகு – ராகி தோசை

தேவையானவை

வரகு அரிசி – 200 கிராம் 
கோதுமை – 100 கிராம்
ராகி – 100 கிராம்
உளுந்து – 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை,
கறிவேப்பிலைசிறிதளவு
வெந்தயம் – 2 டீஸ்பூன்
நெய் () நல்லெண்ணெய்தேவையான அளவு
உப்புதேவையான அளவு

செய்முறை
:

வரகு
அரிசி, ராகி, கோதுமையை தண்ணீரில் 5 மணி நேரமும், வெந்தயம், உளுந்தை ஒரு மணி நேரமும் தனித்தனியாக ஊறவைத்து தனியாக அரைக்கவும். எல்லா மாவையும் ஒன்றாக கலக்கவும். இதில் தேவையான உப்பு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்க்கவும். 3 முதல் 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக ஊற்றி, நெய் அல்லது  நல்லெண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.


இது
 மிகவும் சத்தான தோசை.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...