தேர்தல் செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனை வெளியேற்ற தீர்மானம். உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ஜெ.அன்பழகன் ஒருமையில் பேசியதாக புகார். அவை முன்னவர் ஒ.பன்னீர்செல்வம் தீர்மானம் கொண்டு வந்ததை தொடர்ந்து ஜெ.அன்பழகன் மன்னிப்பு கோரினார் மறப்போம், மன்னிப்போம் என ஒ.பன்னீர்செல்வம் கூறியதால் வெளியேற்றத்தை கைவிட்டார் சபாநாயகர்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் ஜெ.அன்பழகன் நீக்கம். அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையான நடவடிக்கையில் ஈடுபட்டதாக நடவடிக்கை இன்று காலை அமைச்சரை ஒருமையில் பேசிய விவகாரத்தில் ஜெ.அன்பழகனுக்கு எதிராக தீர்மானம். ஒ.பன்னீர்செல்வம் மறப்போம், மன்னிப்போம் என கூறியதால் வெளியேற்ற தீர்மானம் கைவிடப்பட்டது. மீண்டும் பிரச்னைக்குரிய வகையில் நடந்து கொண்டதால் ஜெ.அன்பழகன் மீது நடவடிக்கை.
வாக்குகளை எண்ணாமல் முடிவுகளை அறிவித்த தேர்தல் ஆணையம் தற்போது இல்லை. உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற்றது. பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் – பேரவையில் பொள்ளாச்சி ஜெயராமன் கோரிக்கை.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் சட்ட மசோதா இன்று தாக்கல்.