வெங்காயம், முருங்கைக்காய் விலை குறைந்தது!

 வெங்காயம், முருங்கைக்காய் விலை குறைந்தது!
சென்னை உள்பட நாடு முழுவதும் கடந்த மாதம் 200 ரூபாய் விற்ற வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து தற்போது 40 முதல் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மழையின் காரணமாக வெங்காய உற்பத்தி குறைந்ததை அடுத்து விலை உயர்ந்தது.
இந்நிலையில்,  அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட  வெங்காயம் கிலோ 40 ரூபாய்க்கும்,  வெளி மாநிலத்தில் இருந்து வந்துள்ள வெங்காயத்தின் விலை 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று பச்சை காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது.
கடந்த வாரம் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முள்ளங்கி, வெண்டைக்காய், கத்தரிக்காய், இந்த வாரம் 15 ரூபாய்க்கும்,  தக்காளி 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ 400 ரூபாய் விற்ற நிலையில், தற்போது  முருங்கைக்காய் வி​லை 130 ரூபாய் அளவுக்கு சரிந்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...