இன்றைய முக்கிய செய்திகள்

 இன்றைய முக்கிய செய்திகள்
அமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம்: இந்திய பங்குச் சந்தைகளில் முதலீட்டாளருக்கு ரூ.3 லட்சம் கோடி இழப்பு

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம். கேரளா போல் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – துரைமுருகன். பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் போது ஏன் எதிர்க்கவில்லை?  – அமைச்சர் உதயகுமார். பாஜக கூட்டணியில் இருந்தபோது குடியுரிமை சட்டம் திருத்தப்படவில்லை – துரைமுருகன். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, அபுபக்கர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு.

மீன்களில் பார்மலின் கலக்கப்படுவதாக புகார் – ராமேஸ்வரம் மீன் மார்க்கெட்டில் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு

காஷ்மீரில் விநியோகிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில், பிரிவினைவாத வாசகங்கள் இடம்பெற்றிருந்த விவகாரம். ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவது குறித்து 2 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

வருமான வரி வழக்கில் இருந்து கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோரை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு.

ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.53 சரிவு! ஒரு கிராம் தங்கம் ரூ.3,843க்கு விற்பனை.சவரனுக்கு ரூ.424 குறைந்து ரூ.30,744க்கு விற்பனை நேற்று ரூ.31 ஆயிரத்தை எட்டிய நிலையில் தங்கம் விலை இன்று குறைந்தது.

5 ஆயிரம் கால்நடைகளுக்கு மேல் உள்ள கிராமங்களில், 25 புதிய மருந்தகங்கள் அமைக்க ரூ.3.12 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை. உடுமலைப் பேட்டை, கோபி கால்நடை மருத்துவமனைகள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில், ரூ.2.16 கோடி ஒதுக்கீடு.

குரூப் 2 ஏ தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – தரிசனம், 12 மணி நேரம் தாம‌தம். கூட்டத்தை கட்டுப்படுத்த நிலக்கல், பம்பை பகுதிகளில் பக்தர்கள் நிறுத்தி வைப்பு.

“நளினி உட்பட 7 பேரை விடுவித்தால், அது சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்”. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை எதிர்காலத்தில் இந்த முடிவு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் – மத்திய அரசு.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...