கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை..!

 கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை..!

ஆயுதபூஜையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தை மிகவும் பிரபலமானது. இந்த சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் இங்கு ஆயுத பூஜையை முன்னிட்டு, பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

பொதுவாகவே விஷேச தினங்களில் பூக்களின் விலை உயரும். அந்த வகையில் நாளை மறுநாள் ஆயுத பூஜையும், 12ம் தேதி விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. இதனால் பூக்களின் விலை தற்போது அதிகரித்துள்ளது. அதன்படி மல்லிகைப்பூ ஒரு கிலோ 1000 ரூபாய்க்கும், ஐஸ் மல்லிகைப்பூ ஒரு கிலோ 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் ரூ.300 வரை அதிகரித்துள்ளது.

செண்டு மல்லிப்பூ (துலுக்க சாமந்தி பூ) கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அரளிப்பூ நேற்று 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிச்சி மற்றும் முல்லை பூக்கள் கிலோ 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கனகாம்பரம் கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் ரூ.200 விலை அதிகரித்துள்ளது.

பன்னீர் ரோஜா கிலோ 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த நாட்களை விட 60 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. சாக்லேட் ரோஜா 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாமந்தி பூ கிலோ 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் சம்மங்கி பூ கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. செவ்வந்தி கிலோ 200 ரூபாய்க்கும், வெள்ளை செவ்வந்தி கிலோ 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது 50 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...