சென்னையில் நேற்று ஏற்பட்ட மின்தடை குறித்து அமைச்சர் விளக்கம்..!

 சென்னையில் நேற்று ஏற்பட்ட மின்தடை குறித்து அமைச்சர் விளக்கம்..!

சென்னையில் நேற்று ஏற்பட்ட மின்தடை குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் நேற்றிரவு 10.15 மணியளவில் திடீரென பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. கோயம்பேடு, மதுரவாயல் தொடங்கி திருவான்மியூர், பெசன்ட் நகர், வேளச்சேரி வரை பல இடங்களிலும் மின் விநியோகம் தடைபட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை நீடித்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இரவு 11.30 மணிக்கு பிறகே சென்னை முழுவதும் படிப்படியாக மின் விநியோகம் சீரானது. எனினும், இந்த திடீர் மின் தடையை கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையின் முக்கியமான மின்சார மையமான மணலி துணை மின் நிலையத்தில் நேற்று (செப்டம்பர் 12, 2024) இரவு சுமார் 09:58 மணி அளவில், மின்சாரம் வழங்கும் இரண்டு மின்னூட்டி ஆதாரங்களும் இயக்கத்தில் இருந்த போதும் எதிர்பாராத விதமாக ஒரு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, மணலி துணை மின்நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் இரண்டு 400 கிலோ வோல்ட் மின் ஆதாரங்களின் (அலமாதி மற்றும் NCTPS II) அடுத்தடுத்த மின்தடைக்கு வழிவகுத்தது, ஒரு ஜம்பர் துண்டிப்பும் கண்டறியப்பட்டது. தீ உடனடியாக அணைக்கப்பட்டது.

இருப்பினும், இந்த இரட்டை மின் ஆதாரங்களின் செயலிழப்பு காரணமாக சென்னையின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. மின் தடை காரணமாக, பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை நீக்கி, மாற்று வழியில் மின்சாரம் விநியோகம் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. நள்ளிரவு 2 மணியளவில் சென்னை மாநகரம் முழுவதும் 100% மின்சாரம் சீரமைக்கப்பட்டது.

மேற்கண்ட மின்தடை காரணமாக, சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அத்தியாவசிய சேவைகளிலும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்தில் ஏற்பட்ட சேதங்களைப் போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...