அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ’லப்பர் பந்து’ படத்தின் ட்ரெய்லர்வெளியானது..!

 அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ’லப்பர் பந்து’ படத்தின் ட்ரெய்லர்வெளியானது..!

அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ’லப்பர் பந்து’ படத்தின் ட்ரெய்லர்  வெளியாகியுள்ளது.

நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் லப்பர் பந்து. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.  ‘லப்பர் பந்து’ திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதேபோல இந்த படத்திற்கு  ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சோனி ஆடியோ உரிமை பெற்று உள்ளது. படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

லப்பர் பந்து திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகும் எனவும், இதேபோல ட்ரெய்லர் ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று (ஆக. 28) இப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. டிரைலரை பார்க்கும் போது சமூக கருத்துகளை நகைச்சுவை கலந்து இயக்குநர் தெரிவித்திருப்பார் என யூகிக்கும் அளவிற்கு உள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...