ஓவியர் செ. சிவபாலனின் எண்ணங்களும் வண்ணங்களும்
ஓவியர் செ. சிவபாலனின் எண்ணங்களும் வண்ணங்களும் —-கட்டுரை திவன்யா பிரபாகரன்
சிறுவயதில் கிறுக்கல்களில் ஆரம்பித்த இவரின் ஓவிய ஆசை துளிர்த்து வளர்ந்து கொண்டு இருக்கிறது.
தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இவரின் ஓவியங்களுக்கு தமிழ்நாட்டிலும் மற்றும் தேசிய அளவிலும் பல விருதுகளை பெற்று தந்துள்ளது.
யார் இந்த ஓவியர் என கேட்கறீங்க ?
அவர் தான் செ. சிவபாலன் .
தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலவனத்தம் என்ற கிராமத்தில் பிறந்தவர்.
இவரின் ஓவிய ஆசை எப்படி பிறந்தது தெரியுமா,?
இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது ஒரு மாத இதழில் சென்னை மற்றும் கும்பகோணம் கவின் கல்லூரி பற்றிய செய்தியை படித்துள்ளார் .
அவர் தந்தையிடம் அதை பற்றி கூறியதும் அவர் தந்தை அந்த கல்லூரி பற்றி விரிவாக சொல்லியிருக்கார்.
ஓவியம், சிற்பம் போன்ற துறையில் விருப்பமுள்ளவர்களுக்கு அதைப்பற்றிய ஞானத்தை பயிற்றுவிக்கப்படும் ,ஒரு பிரத்தியேக சிறப்பு கல்லூரி எனக் கூற அன்று முதலே அவருக்கு ஓவியங்களின் மீது மிக அதிகமான ஆவல் பிறந்தது என்கிறார் சிவபாலன். நினைத் ததை நிறைவேற்ற இவர் கும்பகோணம் கவின்கல்லூரி சேர்ந்து ஓவியத்திறனை சிறப்பாக மேம்படுத்திக் கொண்டார் .
ஓவியர்களான திருவாளர்கள் என் எஸ் மனோகர், சிவபாலன் மற்றும் இளையராஜா ஆகியோரை தனது குருவாக ஏற்றுக்கொண்டு அவர்களின் அறிவுறுத்தலின்படி ஓவியம் சார்ந்த திறனை மேம்படுத்திக் கொண்டார் .,
இவர் நீர் வண்ண கலவை ஓவியம் மற்றும் அக்ரிலிக் ஓவியங்களில் நல்ல திறன் பெற்றிருந்தார்.நீர் வண்ண கலவை ஓவியத்தில் அதிக ஆர்வம் உண்டாக அவரது குரு சிவபாலன் அவர்களே காரணம் என்றார்.
அவரின் குருவான சிவபாலன் அவர்களின் ஓவியங்கள் பெரும்பாலும் நீர் வண்ண கலவையில் வரையப்பட்டது.நீர் வண்ண கலவை ஓவியம் நாம் என்ன மனதில் வைத்து ஒரு ஓவியத்தை வரைகிறோமோ அதை நிறைவு பெறும் வரை அதன் நீரோட்டம் செல்லும் என்று அவரின் குரு சொல்வாராம்.
அதுமட்டுமில்லாமல் ஓவியர் சிவபாலனிடம் தான் நீர் வண்ண கலவை ஓவியம் தீட்ட கற்றுக் கொண்டேன் என்கிறார் இவர்.
உங்களுக்கு பிடித்த ஓவியர் யார் என கேட்டதற்கு ,
எனக்குப் பிடித்த ஓவியர் என்று தனியாக சொல்ல முடியாது எல்லா ஓவியர்களையும் எனக்கு பிடிக்கும் என்கிற இவருக்கு .ஷாம் , மாருதி,
நடிகரும் ஓவியருமான சிவக்குமார் இவர்களின் ஓவியங்கள் மிகவும் பிடித்து இருக்குதாம்.
மதன் சார் அவர்களின் படைப்புகளும் அவரை கவர்ந்துள்ளது.
உங்களின் படைப்புகளில் எது உங்களுக்கு பிடிக்கும் என கேட்ட போது
எதிர்பார்ப்பு என்ற தலைப்பில் ஆட்டுக்குட்டி ஒன்று தனது தாய் ஆட்டிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும் அதை பார்த்து ஏங்கும் ஒரு பெண். அந்த பெண்ணின் ஏக்கம் எப்படி னா ஒரு வைரம் உருவாக 10 ஆண்டுகள் ஆகும் ஒரு குழந்தை பிறக்க பத்து மாத ஆகும் ,எனக்கு அந்த குழந்தை வரம் கிடைக்கவில்லையே என ஏங்கும் பெண்ணின் ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பு வெளிப்படுத்துகின்ற ஓவியம்.
மற்ற ஓவியர்களின் படைப்பில் ஓவியர் இளையராஜாவின் பெண்கள் அனைவரும் மண்பானைகளில் சமைக்கும் சூழலில் வரைந்த ஓவியம் பிடித்திருக்கு என்றார்.
உங்களின் ஓவியம் எப்படி பட்டது என கேட்ட போது
தனது ஓவியங்களில் போராட்டம் அதிகம் இருக்காது என்கிறார்..
இல்லை என மொத்தமாக சொல்ல முடியாது என்றாலும் சில வற்றில் வெளிப்படுத்தி இருக்கின்றேன். மேலும் இவர் எனது ஓவியங்களில் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வரைய ஆரம்பித்தால் எனது மொத்த சிந்தனையும் போராட்டத்திலேயே முழு கவனம் பெரும் .மற்ற ஓவியங்களை படைப்பதில் சிக்கல் ஏற்படும் .ஆதலால் நான் சற்று போராட்டக் களத்தில் இருந்து விலகி இருக்கின்றேன்.என்றார்
அனைத்து ஓவியர்களுக்கும் இயக்குனரின் பார்வை இருக்கும் அந்த பார்வை எனக்கும் இருக்கிறது ஒரு ஓவியத்தை வரையும்போது அது எப்படி கொண்டு வர வேண்டும் என்ன வண்ணம் கொடுக்க வேண்டும் அந்த ஓவியம் முடியும் வரை என்னுடைய முழு கவனமும் எண்ண ஓட்டங்களுடன் இணைந்து பயணம் செய்யும்.
சிறிது காலம் பள்ளியில் ஓவிய ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். தற்போது முழுநேர ஓவியராக இருக்கின்றார்,புத்தகங்களின் வடிவமைப்புகளுக்கான ஓவியங்கள் வரைந்து கொடுக்கிறார்
அனைத்து நாவல் கவிதைகள் கட்டுரைகள் போன்ற புதிய புத்தகங்களுக்கு முகப்பு ஒவியங்களை தொடர்ந்து வரைந்து கொடுத்துக்கொண்டிருக்கிறார் ,
இவரது ஓவிய படைப்புகள் எல்லாம் தமிழகத்தின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளது,
பூம்பூம்மாடு ,பெண்கள் கோலம் போடும் ஓவியம், ஜல்லி்க்கட்டு ஒவியங்கள் , தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில் தேர் களின் ஒவியங்கள், விவசாயத்தைச் சார்ந்த கலாச்சார ஓவியங்கள் போன்றவை நிறைய வரைந்து இருக்கிறார் . இவரின் ஜல்லிக்கட்டு ஒவியங்கள் மிகவும் பிரபலம்
இவரது ஓவியங்களை நிறைய வெளிநாட்டினர் வாங்கிச் சென்று அவர்களது வீட்டில் வைத்துள்ளனர். ஓவியங்கள் விற்பனை பற்றி கேட்ட போது ,
வெளிநாட்டு மக்களுக்கும் தமிழகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை ம் ஆனால் தமிழ் நாட்டு கலாச்சாரம் பிடித்ததால் அவர்கள் தனது ஓவியங்களை விலை கொடுத்து வாங்கிச் சென்று தங்கள் இல்லங்களை அலங்கரிக்கிறார்கள் என்றார்
இவர் வரைந்த கார்கில் போர் நினைவுகளை ஞாபகபடுத்தும் ஒவியங்களை தபால் தந்தி துறை சமீபத்தில் தபால் அஞ்சல் அட்டைகளில் வெளியிடப்பட்டுள்ளது,
தபால் தந்தித்துறையின் சேவைகள் குறித்து இவர் வரைந்த ஒவியங்களை தபால் தந்தித்துறை வெளியிட்டுள்ளது
இது இவருக்கு மட்டும் பெருமையல்ல ,தமிழ்நாட்டிற்கே இது பெருமையல்லவா
இவர் தன்னுடைய ஓவியங்களை திரும்பத் திரும்ப வரைந்து அவற்றை பொது மக்களின் பார்வைக்கு பல இடங்களில் காட்சி படுத்தியிருக்கிறார் ,.
இவ்வாறு காட்சி படுத்துவதன் மூலம் பல வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வாங்குவதும் காட்சியகங்களில் விற்பனை செய்வதும் ஓவியர்களுக்கு பெருமையாகவும் புத்துணர்ச்சி ஊட்டக்கூடியதாகவும் இருக்கும் என்றார்.
சென்னை ,கோவை போன்ற நகர்ப்புறங்களில் வாழ்பவர்கள் ஓவியர் செ. சிவபாலன் ஓவியங்களை பார்க்கும் போது கிராமத்தின் சூழ்நிலையில் இருப்பது போலவே உணர்வார்கள் . இவரது ஓவியங்கள் அந்த அளவுக்கு முழு கதையும் பேசும்.
இன்றைய இளைஞர்களுக்கு ஓவியம் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேட்ட பொது ,
இளைய தலைமுறையினருக்கு இன்றைய காலகட்டத்தில் ஓவியங்கள் மேனுவலாக மட்டுமல்லாமல் டிஜிட்டலைஸ்ட் ஆகவும் படைக்கும் வசதிகள் உள்ளன புத்தகங்களுக்கான அட்டை படங்கள் வரைவது, கதைகளுக்கான ஓவியங்கள் வரைவது,மற்றும் திரைப்படத்திற்கான ஸ்டோரி போர்டு வரைவது போன்றவை டிஜிட்டல் பண்ண வாய்ப்பு உள்ளது எனவும் வருகின்ற வாய்ப்பு சிறியதோ பெரியதோ ஆனால் வந்த வாய்ப்பை விட்டு விடாமல் பயன்படுத்திக் கொள்வது நல்லது இதனால் வரும் தலைமுறையினருக்கு வருங்காலத்தில் பெரிய சாதனைகள் படைக்க உதவும் எனவும் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்
கடலில் உள்ள எல்லா சிப்பிகளிலும் முத்து கிடைப்பதில்லை ஏதாவது ஒரு சில சிப்பி களில் தான் முத்து கிடைக்கிறது அதுபோல சிவபாலன் போன்ற ஓவியர்கள் மிக சிலரே மனித சமூகத்தில் இருக்கிறார்கள்.
அந்த முத்துக்களை மாலைகள் ஆக்கி அவைகளை காத்து இந்த உலககை அலங்கரிரக்க நம்மைப் போன்றோரின் கடமையாக கொள்வது அந்த ஓவிய கலைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் .
——-கட்டுரை
திவன்யா பிரபாகரன்