ஆதார் அட்டையை புதுப்பிக்க வரும் 14-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு..!

 ஆதார் அட்டையை புதுப்பிக்க வரும் 14-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க வரும் 14-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆதார் அட்டை என்பது முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது… அந்தவகையில், இந்தியாவில், 140 கோடியே 21 லட்சத்து 68 ஆயிரத்து 849 பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர். அந்த அளவுக்கு அனைவருக்குமே ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாகிவிட்டது. ஆதார் இல்லாமல் எந்த ஒரு செயலையுமே செய்ய முடியாது. ஆதார் நம்பர் இருந்தால்தான் பல அரசு நலத்திட்ட உதவிகளை பெற முடிகிறது.

எனவேதான் 10 வருடங்களுக்கு முன்பு ஆதார் அட்டை வழங்கப்பட்ட நிலையில், இதுவரையில் புதுப்பிக்காத ஆதார் எண் வைத்திருப்பவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு புதுப்பிக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டே வருகிறார்கள். ஆதார் ஒழுங்குமுறை விதிகளின்படி, ஆதார் அட்டைகளை, பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.

அந்தவகையில், இப்போதும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.. ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, போட்டோ போன்ற விவரங்களை புதுப்பித்துக்கொள்ள வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வங்கிக்கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணங்களுடன் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்திலும் புதுப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்கள் ஆதார் தகவல்களை புதுப்பித்து வருகின்றனர். பலரும் புதுப்பித்துவிட்ட நிலையில், இன்னும் 40 கோடியே 7 லட்சத்து 56 ஆயிரத்து 436 பேர் ஆதார் எண்ணை புதுப்பிக்கவில்லை என்று ஆதார் ஆணையம் கூறியிருக்கிறது.. அதனால், வருகிற செப்டம்பர் 14-ந் தேதி வரை கட்டணமின்றி ஆதாரை புதுப்பிக்க ஆணையம் அவகாசத்தையும் தற்போது வழங்கி உள்ளது. இதுவரை ஆதாரை புதுப்பிக்காதவர்கள் அதற்குள் ஆதார் அட்டை புதுப்பிக்க வேண்டும் என்றும், அதற்கு பின்பு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி தான் ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.

செப்டம்பர் 14, 2024க்கு முன் ஆதார் அட்டை ஆவணங்களை ஒரு நபர் புதுப்பிக்கவில்லை என்றால், myAadhaar என்ற ஆதார் போர்ட்டலுக்குள் நுழைந்து ரூ.25 அல்லது ஆதார் மையங்களில் ரூ.50 செலுத்தி, அவர்களின் அடையாள மற்றும் முகவரி சான்று ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும்.

இதற்கு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, தொழிலாளர் அட்டை, மதிப்பெண் சான்றிதழ், திருமண சான்றிதழ், ரேஷன் கார்டு, முகவரி சான்று, போன்றவை தேவைப்படும். அதேபோல, வங்கி பாஸ்புக், கேஸ் சிலிண்டர் பில், பாஸ்போர்ட், திருமணச் சான்றிதழ், ரேஷன் கார்டு, சொத்து வரி ரசீது இப்படி ஏதாவது ஆவணம் தேவைப்படும்.

எப்படி புதுப்பிப்பது:

myAadhaar என்ற போர்ட்டலுக்கு சென்று, Enter Option ஐ- கிளிக் செய்ய வேண்டும். உங்கள் ஆதார் எண், கேப்ட்சா குறியீடுகளை உங்களது OTPஐ பதிவிட்டு உள்ளே நுழைய வேண்டும். ஆவண புதுப்பிப்பு (Document Update) என்ற ஆப்சனை கிளிக் செய்து, நெக்ஸ்ட் (Next) ஆப்ஷனையும் கிளிக் செய்ய வேண்டும்.

“மேலே உள்ள விவரங்கள் சரியானவை என்பதை நான் சரிபார்க்கிறேன்” (I verify that the above details are correct) என்ற கட்டத்தை கிளிக் செய்து, மீண்டும் “நெக்ஸ்ட்” ஆப்சனை கிளிக் செய்யவும். அடையாள சான்று (ID Proof) மற்றும் முகவரிச் சான்று (Address Proof) ஆகியவற்றிற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்து “சமர்ப்பி” (Submit) என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், உங்கள் ஆதார் அட்டை இலவசமாக அப்டேட் செய்யப்பட்டுவிடும்.

இதற்கு பிறகு, அப்டேட் செய்யப்பட்ட உங்கள் ஆதார் அட்டை ஒரு வாரத்துக்குள் புதுப்பிக்கப்படும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...