விஜய் சேதுபதியைப் பாருங்க…

 விஜய் சேதுபதியைப் பாருங்க…
ரசிகர்கள்தானே நடிகர்களின் பிறந்த நாளை கொண்டாடுவாங்க… ஆனால், விஜய் சேதுபதியைப் பாருங்க… 
பொதுவாக ரசிகர்கள்தான் நடிகர்களின் பிறந்த நாளை கொண்டாடுவார்கள். ஆனால், விஜய் சேதுபதி வித்தியாசமாக படப்பிடிப்புத் தளத்திற்கு தனது பிறந்தநாளைக் கொண்டாட தேடிவந்த ரசிகருக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.ரசிகரின் பிறந்தநாளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள் ஷிவமோகாவில் நடைபெற்று வருகிறது.நடிகர் விஜயின் பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்காலிகமாக தளபதி 64 என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார்.

 இந்தப் படத்தின் படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஷிவமோகாவில் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தில், நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது. அது மட்டுமில்லாமல், இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியாவும் நடித்து வருகிறார்.தளபதி 64 படத்தில் விஜய்யும் விஜய் சேதுபதியும் நடிக்கும் காட்சிகள் ஷிவமோகாவில் படமாக்கப்பட்டு வருகிறது. விஜய் படம் படப்பிடிப்பு நடப்பதை அறிந்த ரசிகர்கள் அங்கே கூடுவதால் அவ்வப்போது படப்பிடிப்பு தளம் பரபரப்பாகி வருகிறது.இந்த நிலையில், தளபதி 64 படத்தில் படப்பிடிப்பு தளத்துக்கு ரசிகர் ஒருவர் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக வந்தார்.

https://twitter.com/Thalapathy64Off/status/1210255920187359232

ஷிவமோகா ஹோட்டலில் இருந்து வெளியே வந்த விஜய் சேதுபதி, அங்கே ரசிகர் ஒருவர் ரோஜாப்பூ மாலையுடன் இருப்பதைப் 
பார்த்து அருகில் சென்று அதை வாங்கிக்கொண்டு கை கொடுத்தார். விஜய் சேதுபதியிடம் அந்த ரசிகர் விஷயத்தைக் கூற, ரசிகர் கொண்டுவந்த கேக்கை வெட்டி ஊட்டிவிட்டு அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது எடுக்கபப்ட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிவருகிறது.பொதுவாக ரசிகர்கள்தான் தங்களுடைய அபிமான நடிகரின் பிறந்தநாளை கேக் வெட்டி கட்அவுட் வைத்து கொண்டாடுவார்கள். ஆனால், படப்பிடிப்பு தளத்துக்கு வந்த தனது அபிமான நடிகருடன் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என வந்த ரசிகருக்கு பிறந்தநாள் கேக் வெட்டி ஊட்டிவிட்டு கொண்டாடியுள்ளார். இந்த வீடியோ விஜய் சேதுபதியின் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து வருகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...