இலங்கை பாமாயில்: மலையக தமிழர்களை அழிக்கும் முயற்சியா?
இலங்கையில் பெருந்தோட்ட பயிர் செய்கைகளை இல்லாது செய்து, முள் தேங்காய் (கட்டுப்பொல்) என்று அழைக்கப்படும் பாம் ஆயில் சாகுபடியை பெருந்தோட்ட நிறுவனங்கள் தற்போது செய்து வருகின்றன என செயல்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.முள் தேங்காய் செய்கை, இலங்கை அரசாங்கத்தின் பூரண அனுமதியுடனேயே முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிறுவனங்கள் தரப்பில் கூறினாலும் முள்
தேங்காய் செய்கையை இடை நிறுத்தி வைக்க அரசு முன்பு முடிவெடுத்துள்ளதாக அரசு தரப்பு தெரிவிக்கிறது.மலையகத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ரப்பர், தேயிலை போன்ற செய்கைகளை இல்லாது செய்து, இந்த முள் தேங்காய் சாகுபடிக்கு நிறுவனங்கள் முன்னுரிமை வழங்கி வருவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.