மக்கள்தொகை கணக்கெடுப்பை செப்டம்பர் மாதம் நடத்த ஒன்றிய அரசு திட்டம்..!
மக்கள்தொகை கணக்கெடுப்பை செப்டம்பர் மாதல் முதல் நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் கடைசியாக 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வெகுநாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றன. இந்த கோரிக்கையை முன்வைத்து வரும் வியாழன்கிழமை நாடு தழுவிய போராட்டத்தையும் காங்கிரஸ் முன்னெடுக்கிறது.
இந்நிலையில், செப்டம்பர் மாதம் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கணக்கெடுப்பை நடத்த சுமார் 16 மாதங்கள் ஆகும் எனவும், 2026 மார்ச்சுக்குள் இதன் தரவுகள் வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு, கொரோனா தொற்றால் தாமதமானது.
கணக்கெடுப்பு தாமதமானால் வேலைவாய்ப்பின்மை, பணவீக்க தரவுகள், புள்ளவிவர ஆய்வுகள் ஆகியவை பாதிக்கப்படும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.