வயநாடு நிலச்சரிவு உயிரிழப்பு 54ஆக உயர்வு..!

 வயநாடு நிலச்சரிவு உயிரிழப்பு 54ஆக உயர்வு..!

வயநாடு நிலச்சரிவில் உயிரிழப்பு எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள்ள நிலையில் தேசிய பேரிடராக அறிவிக்க மாநிலங்களவையில் கேரள எம்பிக்கள் இன்று வலியுறுத்தினர்.

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

நேற்று காலை முதலே கனமழை பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில், முண்டகையில் நள்ளிரவு 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலையில் பெரிய அளவிலான 2வது நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 51-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிலச்சரிவில் 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மீட்புக் குழுவினர் அப்பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

2 ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபடுகின்றனர். முண்டகை மற்றும் அட்டமலை செல்ல வடம் பயன்படுத்தி தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு, பெங்களூர் உட்பட பிற பகுதிகளில் இருந்து நான்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வயநாடு விரைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவு விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. வயநாடு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும்  கேரள எம்பிக்கள் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினர். இதற்கு துறைரீதியான  அமைச்சர்கள் பதிலளித்தனர். இதனைத் தொடர்ந்து கேரள எம்பிக்கள் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...