ஆதார் கார்டு ஜெராக்ஸ் – ஒரு முக்கிய விஷயமுங்க!

 ஆதார் கார்டு ஜெராக்ஸ் – ஒரு முக்கிய விஷயமுங்க!
ஆதார் கார்டு ஜெராக்ஸ் – ஒரு முக்கிய விஷயமுங்க!

பணத்தை வங்கியில் மாற்றும் போது நாம் தரும் ஆதார் கார்டு ஜெராக்ஸை மறுஜெராக்ஸ் எடுத்து யாரேனும் கருப்பு பணம் உள்ளவர்கள் நம் பெயரை பயன்படுத்தி தன் பணத்தை மாற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. அதை தவிர்க்க ஆடிட்டர் சொல்லி கொடுத்த வழிமுறை இது…
ஆதார் கார்டு அல்லது ஐடி ப்ரூஃப் ஜெராக்ஸை வங்கியில் கொடுக்கும் போது ப்ரிண்ட் மேலேயே ஓரத்தில் Self-Attested என்று போட்டு உங்க கையெழுத்து போட்டு கொடுங்க. அப்படி கொடுத்தால் அதை ஜெராக்ஸ் எடுத்தாலும் செல்லாது. 

Submitted for the purpose of……… எந்த காரணத்துக்காக கொடுக்கப்பட்டது என்பதையும் எழுதி கொடுத்து விடுங்கள். மேலும் Self Attested  கீழே நீங்கள் கையெழுத்து போடும் போது தேதியையும் குறிப்பிடுங்கள். 
ஏனெனில் “Self Attested + Signature” இருப்பதை ஒவ்வொரு முறையும் பேனாவால் தான் எழுத வேண்டும். அப்போது தான் அது செல்லும். இனி மேல் சிம் கார்டுக்கோ வேறு எதுக்குமோ ஐடி ப்ரூஃப் தரும் போதும் இதே வழிமுறையை பின்பற்றுங்கள். உங்கள் பெயரில் நடக்கும் முறை கேடுகளை இதன் மூலம் தவிர்த்து விடலாம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...