‘வாட்ஸ் அப்’பின் புதிய அம்சம் வருகிறது..!
வாட்ஸ்அப் இல்லாத பயனர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். முன்னணி மெசேஜிங் பிளாட்பார்மாக வாட்ஸ் அப் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர். இதனால் மெட்டா நிறுவனம் தொடர்ந்து பயனர்களுக்கு உதவும் வகையில் புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மெசேஜ்களை ட்ரான்ஸ்லேட் செய்யும் வசதியை வாட்ஸ் அப் கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளது. அதன் விபரங்கள் குறித்து விவரிக்கிறது இந்த பதிவு.
வாட்ஸ் அப்பின் இந்த புதிய அம்சத்தின் மூலம் ஒரு மொழியிலிருந்து பயனர்கள் இன்னொரு மொழிக்கு வாட்ஸ் அப் மெசேஜ்களை மொழிபெயர்க்க முடியும். ஆனால் முதலில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இந்த அம்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் மொழிகள் சேர்க்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மொழி தெரியாத உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பிறர் மெசேஜ் செய்யும் போது அவற்றை காப்பி செய்து “Google Translator”-ஐ பயன்படுத்தி வந்த மக்கள், தற்போது இந்த புதிய அம்சத்தின் மூலம் வாட்ஸ் அப் மெசேஜ் சாட்-குள்ளேயே என்ன மெசேஜ் பிறர் அனுப்புகின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த புதிய அம்சமானது சாட் செய்யும் போது செய்திகளை உடனடியாக மொழிபெயர்க்கும். பயனர்கள் பிற மொழியில் பேசுபவர்களை புரிந்துகொண்டு பதிலளிப்பதை எளிதாக்கும் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த மொழிபெயர்ப்பு அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு பீட்டா டெஸ்டர்களின்களின் குழுவிற்குக் கிடைக்கிறது மற்றும் WABetaInfo-இன் தகவல் படி, 2.24.15.8 என்ற அப்டேடட் வாட்ஸ் அப் வெர்ஷனில் கிடைக்கும். இந்த அம்சம் கூகுளின் நேரடி மொழிபெயர்ப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.
மேலும் வாய்ஸ் நோட்டுகளை டெக்ஸ்ட்டாக மாற்றும் புதிய அம்சத்தையும் அறிமுகப்படுத்துவதற்கு வாட்ஸ் அப் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் சில நாடுகளில் உள்ள பீட்டா பயனர்களின் சிறிய குழுவுடன் தற்போது சோதிக்கப்படுகிறது.
டிரான்ஸ்கிரைப் அம்சம் பயனர்களுக்கு ஆங்கிலம், ரஷ்யன், ஸ்பானிஷ், போர்த்துகீசியம், பிரேசில் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் இருந்து தேர்வு செய்ய உதவும். மேலும் பல மொழிகள் பின்னர் சேர்க்கப்படும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் மெட்டா AI தொழில்நுட்ப அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பயனாளர்கள் தங்களுடைய கேள்விகளை கேட்கலாம். ஒரு விஷயத்தை டெக்ஸ்ட்டாக கொடுத்து இமேஜாக மாற்றி கேட்கலாம். பயனர்களுக்கு உதவும் வகையில் பல அம்சங்களை மெட்டா நிறுவனம் கொண்டு வருவது வரவேற்கத்தக்கதாக உள்ளது.