தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

 தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும்  ‘ராயன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் தனுஷின் 50-வது திரைப்படமாக உருவாகும் ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.  இந்த திரைப்படத்தை தனுஷே எழுதி,  இயக்கி,  நடித்து வருகிறார்.  இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன்,  சந்தீப் கிஷன்,  காளிதாஸ் ஜெயராம்,  எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வடசென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த டிசம்பர் மாதம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.  இந்த திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  இந்த திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த போஸ்டரில் தனுஷ்,  சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம்,  துஷாரா விஜயன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  மேலும், இந்த போஸ்டரை பகிர்ந்து,  ‘ராயனும் வருவான் தீயா’ என்று படக்குழு பதிவிட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...