TCS உடன் “BSNL” மாஸ் திட்டம்..!

 TCS  உடன்  “BSNL” மாஸ் திட்டம்..!

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் டெலிகாம் சேவை நிறுவனமான BSNL உடன் ரூ.15,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் செய்துள்ளது.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் லாபகரமாக மாறுவது மட்டும் அல்லாமல் விரைவில் 4ஜி சேவைக்காகவும், இந்திய கிராமங்களை அதிவேக இண்டர்நெட் சேவை உடன் இணைக்கும் மாபெரும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இந்த கனவு திட்டத்திற்கு பக்கபலமாக இருப்பது டிசிஎஸ்.

தற்போது டிசிஎஸ் மற்றும் பிஎஸ்என்எல் உடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் நான்கு மண்டலங்களில் பெரிய டேட்டா சென்டர்களை நிறுவப்பட உள்ளதாக டிசிஎஸ்-ன் தலைமைச் செயல் அதிகாரி என்.கணபதி சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இதுபோக, இந்தியாவில் BSNL 4G சேவையை அறிமுகம் செய்யவும், அதன் நெட்வொர்க்-ஐ வலுப்படுத்துவதற்கான டிசிஎஸ், மத்திய அரசின் சென்டர் ஃபார் டெவல்ப்மெண்ட் ஆஃப் டெலிமாடிக்ஸ் (C-DOT) நிறுவனத்துடன் இணைந்து BSNL நிறுவனத்தின் 38 டெலிகாம் வட்டங்களில் 4ஜி கட்டமைப்புகளை நிறுவ உள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி நெட்வொர்க் மொத்தமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வன்பொருள் மற்றும் மென்பொருள் உடன் இயங்கும் சொந்த கட்டமைப்பாகும். இந்த கட்டமைப்பை உருவாக்க டிசிஎஸ், C-DOT, BSNL இணைந்து செயல்பட்டு உள்ளது.

இதுக்குறித்து டிசிஎஸ் கணபதி சுப்பிரமணியம் கூறுகையில் “இது மிகவும் சிக்கலான பணி. ஏனென்றால், டேட்டா சென்டர் அமைக்கும் நான்கு மண்டலங்களிலும் தலா இரண்டு பெரிய டேட்டா சென்டர்கள் அமைக்கப்பட வேண்டும். ஒன்று பிரதான டேட்டா சென்டாரகவும் (Primary Server – PR)க்காகவும், மற்றொன்று இயற்கை பேரிடர் போன்ற அவசர சூழ்நிலைகளில் மீட்பு நடவடிக்கைகளுக்கான டேட்டா சென்டாரகவும் (Disaster Recovery Server – DR)க்காகவும் இருக்கும்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “ஒவ்வொரு தொலைத்தொடர்பு வட்டாரத்தின் இணையப் பயன்பாட்டுத் தேவையைப் பொறுத்து, அங்கு 30 டேட்டா சென்டர்கள் வரை அமைக்கப்படும். எனவே, 38 டேட்டா வட்டத்தில் மொத்தம் 38 டேட்டா சென்டர்கள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளன. இந்த பணியை ஜூன் மாதத்திற்குள் முடிக்க, சப்ளையர்கள் கூட்டணி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்” என்றார்.

இந்த திட்டம் மூலம் டிசிஎஸ் நிறுவனம் Ericsson, Nokia மற்றும் Huawei போன்ற உலகளாவிய டெலிகாம் நிறுவனங்களுடன் போட்டியிடும் நவீன 4G மற்றும் 5G தகவல் தொடர்பு உள்கட்டமைப்புப் பிரிவில் TCS நுழைந்துள்ளது. ஏறக்குறைய ஒரு வருட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...