வரலாற்றில் இன்று ( 25.04.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஏப்ரல் 25 கிரிகோரியன் ஆண்டின் 115 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 116 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 250 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

775 – அப்பாசியக் கலீபகத்திற்கு எதிரான ஆர்மேனியர்களின் கிளர்ச்சி பாக்ரிவாந்தில் நடந்த சமருடன் முடிவுக்கு வந்தது. தெற்கு காக்கேசியாவில் இசுலாமியமயமாக்கல் ஆரம்பமானது. முக்கிய ஆர்மீனிய குடும்பத்தினர் பைசாந்தியத்திற்கு தப்பி ஓடினர்.
799 – உரோமை மக்களால் மிக மோசமாக நடத்தப்பட்ட திருத்தந்தை மூன்றாம் லியோ, பாதுகாப்புத் தேடி பிரான்சியா சென்ரார்.
1607 – எண்பதாண்டுப் போர்: சிப்ரால்ட்டரில் டச்சுக் கடற்படையினர் எசுப்பானியக் கடற்படைக் கப்பலைத் தாக்கி அழித்தனர்.
1644 – மிங் சீனாவின் கடைசிப் பேரரசர் சொங்சென், உழவர் கிளர்ச்சியை அடுத்துத் தற்கொலை செய்து கொண்டார்.
1707 – எசுப்பானிய மரபுரிமைப் போர்: பிரித்தானிய, இடச்சு, போர்த்துக்கல் கூட்டுப் படைகள் பிராங்கு-எசுப்பானிய வீரர்களால் தோற்கடிக்கப்பட்டனர்.
1792 – கில்லட்டின் மூலம் முதலாவது மரண தண்டனை பாரிசில் நிறைவேற்றப்பட்டது.
1804 – மேற்கு ஜோர்ஜியாவின் இமெரெட்டி இராச்சியம் உருசியப் பேரரசின் மேலாட்சியை ஏற்றுக் கொண்டது.
1829 – சார்ல்ஸ் பிரெமாண்டில் மேற்கு அவுஸ்திரேலியாவில் சலேஞ்சர் என்ற கப்பலில் தரையிறங்கி சுவான் ஆற்று குடியேற்றத்தை ஆரம்பித்தார்.
1846 – டெக்சசு எல்லை தொடர்பான பிரச்சினை மெக்சிக்கோ-அமெரிக்கப் போருக்கு வழிவகுத்தது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் வாஷிங்டன், டிசியை அடைந்தன.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் டேவிட் பராகுட் தலைமையில் லூசியானாவின் நியூ ஓர்லென்ஸ் நகரை கூட்டமைப்பினரிடம் இருந்து கைப்பற்றினர்.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற போரில் கூட்டமைப்பினர் பெரும் வெற்றி பெற்றனர்.
1898 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கா எசுப்பானியா மீது போரை அறிவித்தது.
1915 – முதலாம் உலகப் போர்: கலிப்பொலி போர்த்தொடர் ஆரம்பமானது. ஆத்திரேலியா, பிரித்தானியா, நியூசிலாந்து மற்றும் பிரெஞ்சுப் படைகள் துருக்கியின் கலிப்பொலியை முற்றுகையிட்டன.
1916 – அன்சாக் நாள் முதல் தடவையாக நினைவு கூரப்பட்டது.
1945 – ஐக்கிய நாடுகள் அவையை நிறுவுவதற்கான ஆலோசனைகள் சான் பிரான்சிஸ்கோவில் 50 நாடுகளின் பங்களிப்போடு ஆரம்பமாயின.
1945 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனிய ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்கு இத்தாலியில் இருந்து விலகியது. பெனிட்டோ முசோலினி கைது செய்யப்பட்டார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: கடைசி நாட்சிப் படையினர் பின்லாந்தில் இருந்து விலகினர்.
1951 – கொரியப் போர்: காப்பியாங் நகரில் ஐநா படைகளுடன் நடந்த பெரும் மோதலை அடுத்து, சீனப் படைகள் விலகின.
1953 – பிரான்சிஸ் கிரிக், ஜேம்ஸ் டூயி வாட்சன் ஆகியோர் டி. என். ஏ.யின் இரட்டை வட அமைப்பை வெளியிட்டனர்.
1954 – முதலாவது செயல்முறை சூரிய மின்கலம் பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
1961 – ராபர்ட் நாய்சு தொகுசுற்றுக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1974 – போர்த்துகலில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த பாசிச அரசு கவிழ்க்கப்பட்டு மக்களாட்சி ஏற்படுத்தப்பட்டது.
1981 – சப்பானின் சுருகா அணுமின் நிலையத்தில் நூற்றிற்கும் அதிகமான தொழிலாளர்கள் கதிர்வீச்சுத் தாக்கத்திற்கு உள்ளாயினர்.
1982 – காம்ப் டேவிட் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இசுரேலியப் படைகள் முழுவதுமாக சினாய் தீபகற்பத்தில் இருந்து வெளியேறியது.
1983 – பயனியர் 10 விண்கலம் புளூட்டோ கோளின் சுற்றுப்பாதையைத் தாண்டிச் சென்றது.
1986 – எசுவாத்தினியின் மன்னராக மூன்றாம் முசுவாத்தி முடிசூடினார்.
1988 – இரண்டாம் உலகப் போரில் இழைத்த போர்க்குற்றங்களுக்காக ஜோன் டெம்ஜானுக் என்பவருக்கு இசுரேல் மரண தண்டனை விதித்தது.
2005 – இத்தாலிய ஆக்கிரமிப்பாளர்களால் 1937 இல் களவாடப்பட்ட 1700-ஆண்டுகள் பழமையான சதுர நினைவுத்தூபியின் கடைசித் துண்டு எத்தியோப்பியாவுக்கு கொண்டுவரப்பட்டது.
2005 – பல்காரியா, உருமேனியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.
2006 – கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் தற்கொடைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்து 5 பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர்.
2015 – நேபாளத்தில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 9,100 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

1599 – ஆலிவர் கிராம்வெல், இங்கிலாந்தில் முடியாட்சியை நீக்கியவர், அரசியல்வாதி (இ. 1658)
1874 – மார்க்கோனி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய இயற்பியலாளர், கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர் (இ. 1937)
1906 – புதுமைப்பித்தன், தமிழக எழுத்தாளர் (இ. 1948)
1911 – எஸ். வி. வெங்கட்ராமன், தமிழக திரைப்பட இசையமைப்பாளர் (இ. 1998)
1912 – மு. வரதராசன், தமிழகத் தமிழறிஞர், எழுத்தாளர், கல்வியாளர் (இ. 1974)
1918 – ஜெரார்டு தெ வவுகவுலியூர்சு, பிரான்சிய-அமெரிக்க வானியலாளர் (இ. 1995)
1923 – பிரான்சிசு கிரகாம் சுமித், ஆங்கிலேய வானியலாளர்
1932 – நிக்கொலாய் கர்தசோவ், உருசிய வானியற்பியலாளர் (இ. 2019)
1935 – எட்வின் பீபுள்சு, கனடிய-அமெரிக்க இயற்பியலாள6, அண்டவியலாளர்
1935 – செல்லையா பொன்னத்துரை, இலங்கைத் துடுப்பாட்ட நடுவர் (இ. 2013)
1940 – அல் பசீனோ, அமெரிக்க நடிகர், இயக்குநர்
1943 – தேவிகா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2002)
1947 – யோகன் கிரையொஃப், டச்சு கால்பந்து வீரர் (இ. 2016)
1949 – டொமினிக் ஸ்ட்ராஸ்-கான், பிரான்சிய பொருளியலாளர், அரசியல்வாதி

இறப்புகள்

1744 – ஆன்டர்சு செல்சியசு, சுவீடன் வானியலாளர், இயற்பியலாளர், கணிதவியலாளர் (பி. 1701)
1960 – அமனுல்லாகான், ஆப்கானித்தான் அரசுத்தலைவர் (பி. 1892)
1961 – ரா. பி. சேதுப்பிள்ளை, தமிழகத் தமிழறிஞர், எழுத்தாளர் (பி. 1896)
1968 – படே குலாம் அலி கான், இந்துத்தானி செவ்விசை பாடகர் (பி. 1902)
1989 – வ. சுப. மாணிக்கம், தமிழகத் தமிழறிஞர் (பி. 1917
1999 – வில்லியம் அண்டர் மெக்கிரியா, ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1904)
2003 – பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை, இலங்கை கத்தோலிக்க ஆயர் (பி. 1917)
2005 – இரங்கநாதானந்தர், இந்திய மதகுரு (பி. 1908)
2018 – எம். எஸ். ராஜேஸ்வரி, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி (பி. 1931)

சிறப்பு நாள்

உலக மலேரியா நாள்
அன்சாக் நாள் (ஆத்திரேலியா, நியூசிலாந்து)
மர நாள் (செருமனி)
டிஎன்ஏ நாள்
விடுதலை நாள் (இத்தாலி)
விடுதலை நாள் (போர்த்துகல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!