சிவலிங்கம் – பக்தி

வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி தோண்டும்போது சிவலிங்கம் ஒன்றைக் கண்டெடுத்தான்.
அதை அரசனிடம் எடுத்துச் சென்றபோது ”சுடுகாட்டில் கிடைத்ததை நீயே வைத்துக்கொள் சுடுகாட்டுச் சாம்பலை வைத்து அபிஷேகம் செய்” என்று ஏளனமாக அரசன் கூறிவிட்டான். இறை வழிபாடு என்றால் என்ன என்று தெரியாத வெட்டியானும் அரசனது வார்த்தைகள் ஏளனமானவை என்பதை அறியாமல், பிணம் எரித்த சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான் .

ஒருநாள் திடீரெனப் பெய்த 
மழையினால், சுடுகாட்டில் இருந்த சாம்பல் முழுவதும் கரைந்து விட்டது. சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய சாம்பல் இல்லையே என வருந்திய அவனும் விராட்டிகளை அடுக்கி தீயை மூட்டிவிட்டு தனது மனைவியிடம் ”நான் இந்த தீயில் விழுகிறேன். என் உடல் எரிந்து கிடைக்கும் சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்” என்று கூறினான்.
ஆனால் மனைவியோ ”நீங்கள் அப்படி இறந்து விட்டால் இங்கு வரும் பிணங்கள் சீரழிந்துவிடும், நானே தீயில் குதிக்கின்றேன்” என்று கூறிக்கொண்டே தீயில் வீழ்ந்தாள். இருவரது பக்தியிலும் திளைத்த பரமசிவன் பார்வதியுடன் பிரத்தியட்சமாகி மனைவியை உயிர்ப்பித்து இருவரையும் முக்தியடைய வைத்தார். இதைக் கேட்ட அரசனும் தங்கத்தால் ஆன சிவலிங்கத்திற்குப் பன்னீர், பஞ்சாமிர்தம் என்றும்
வாசனைத் திரவியங்களாலும் அபிஷேகம் செய்த எனக்கு காட்சிதராத இறைவன், சுடுகாட்டுச் சாம்பலையும், பழைய சோற்றையும் கொடுத்தவனுக்கு மோட்சம் அளித்துள்ளாரே என்று வருந்தினாலும்.
பக்தி_என்பது ஆடம்பரத்தில் இல்லை அன்பினால் மட்டுமே மலரக்கூடியது என்பதை உணர்ந்து கொண்டான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!