சிறுநீரக செயலிழப்பை சீர் செய்ய சித்தர்கள் கண்டுபிடித்த வீட்டு வைத்தியம்!
சிறுநீரக செயலிழப்பை சீர் செய்ய சித்தர்கள் கண்டுபிடித்த வீட்டு வைத்தியம்!
நெருஞ்சில் கஞ்சி
தேவையான பொருட்கள்:
நொய்யரிசி – 100 கிராம்
சிறுநெருஞ்சில் – 5 கிராம்
மிளகு – 5 கிராம்
பூண்டு – ஒரு பல்
சீரகம் – கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
செய்முறை :
முதலில் அரிசியை கழுவி 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். பின்பு சிறு நெருஞ்சில், மிளகு, பூண்டு, சீரகம் போன்றவற்றை நன்றாக மசித்து அதனுடன் சிறிது மஞ்சள் சேர்த்து சுத்தமான காட்டன் துணியில் முடிந்து நோய் அரிசியுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் போதவில்லை என்றால் இன்னும் இரண்டு தம்ளர் நீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். சாதத்தை குழைய வைத்து பின்னர் நெருஞ்சில் முடிச்சு போட்ட துணியை எடுத்து விட்டு அதனுடன் சிறிது உப்பு சேர்த்து சாப்பிடவும் .
பலன்கள் :
இந்த கஞ்சியை தினமும் காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால் செயலிழந்த சிறுநீரகம் சீராக இயங்க உதவும். மேலும் சிறுநீரக கற்களையும் கரைக்கும். இது சித்தர்களின் அற்புதமான முறையாகும். தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு :
அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.