தொடர் விடுமுறை எதிரொலியாக ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்வு..!

 தொடர் விடுமுறை எதிரொலியாக ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்வு..!

பொதுவாக தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்கள் வந்தாலே சென்னையில் வசிக்கக் கூடிய பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.  புனித வெள்ளி தினமான இன்றுடன் (மார்ச் 29),  வார இறுதி நாட்களையும் சேர்த்து 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.  இதனை தொடர்ந்து,  ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல தங்கள் கட்டணத்தை உயர்த்தியுள்ளன.

அந்த வகையில்,  வழக்கமாக சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல ஆம்னி பேருந்துகளில் நபர் ஒருவருக்கு ரூ. 700 முதல் ரூ.1,000 வரை வசூலிக்கப்பட்டு வந்த நிலையில்,  தற்போது ரூ. 1,700 முதல் ரூ. 3,000 வரை வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.  இதேபோல கோவைக்கு ரூ. 1,000 முதல் ரூ. 1,300 வரை கட்டணமாக இருந்து வந்த நிலையில், தற்போது ரூ. 3,200 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

மேலும் சில பேருந்துகளில் நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு ரூ. 4,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  இதேபோல் சென்னையிலிருந்து பெங்களூருக்கு ரூ.3,000,  விஜயவாடாவுக்கு ரூ. 2,200 வரை வசூலிக்கப்படுவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...