உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கத்தின் “எழுத்துக்கு மரியாதை” நிகழ்ச்சியின் நிகழ்வுகள்..!
முனைவர்.திரு.பாரசாண்டில்யன் எழுதிய இறைவணக்கப்பாடல் பாடகி.திருமதி.சைந்தவியின் குரலில் இசைக்க துவங்கியது.
முனைவர் திரு.பாலசாண்டில்யன் வரவேற்றுப் பேசினார்.
கவியரங்கத்தில் மனதுக்கு மகிழ்ச்சி தருவது
“இனிக்கும் இசை”
என்ற தலைப்பில் கே.ஜி.ஜவஹர்,
“அமைதி தரும் ஆன்மிகம்’” என்ற தலைப்பில் ஜி.சுப்பிரமணியன்,
“உறவுகளின் உற்சாகம்” என்ற தலைப்பில் துருவன்,
” தனிமையில் இனிமை” என்ற தலைப்பில் .பி.வி.ராஜாமணி
எழுதிய கவிதையை தொலைபேசி மீரான் ,
“நல்ல நட்பு “ என்ற தலைப்பில் .கருமலைத்தமிழாழன், எழுதியதை உதயம் ராம்
“அறிவூட்டும் நூல் வாசிப்பு ” என்ற தலைப்பில் பொதிகை செல்வராஜ் ஆகியோர் கவிதைகளை வாசித்தனர்.
தலைமை தாங்கிய கலைமாமணி ஏர்வாடி திரு. இராதா கிருஷ்ணன்
கவிஞர்களை வாழ்த்தினார். அளவுக்கு அதிகமாக ஒருவர் பிரபலமாவது கூட சிலருக்கு எரிச்சல்களை ஊட்டும் என்ற கருத்தை ஆங்கிலக் கவிஞர் பெர்னார்டுஷா வாழ்க்கையில் நடந்ததைக் கூறி விளக்கினார்.
சமூக சேவகர் திரு. வி.தயாளன் கவிஞர்களுக்கு பரிசளித்து பாராட்டுரை வழங்கினார்.
உரத்தசிந்தனை மாத இதழில் வெளிவந்த வெண்பாக்களிலிருந்து சிறந்த 2 வெண்பாக்களை எழுதிய கவிஞர்களான திரு.ஜனமேஜயன் , திரு. அறிவுத்தொகையன் ஆகியோருக்கு “வெண்பா வேந்தர் “ என்ற விருதினையும் மற்றும் பரிசினையும் முனைவர் திரு.அமுதா பாலகிருஷ்ணன் வழங்கி மகிழ்ந்தார்.
வெண்பா தேர்வு குறித்து கவிஞர்.குமரிச்செழியன் மதிப்புரை வழங்கினார்.
சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதியான
திரு.ராஜேஸ்வரன் அவர்கள் முனைவர் திரு.அமுதா பாலகிருஷ்ணன் எழுதிய
” வாரங்கலுக்கு வாரீகளா “ என்ற நூலை வெளியிட எழுத்துச்செல்வர் கலைமாமணி முனைவர் திரு. லேனா தமிழ்வாணன் முதல் பிரதிபெற்ற பின்னர் இந்த பயணக்கட்டுரையில் பற்பல சிறப்பான சம்பவங்களை எடுத்துரைத்ததோடு உரையாடல் மூலம் புதிய யுக்தியை புகுத்தியுள்ளார் என்று மதிப்புரை வழங்கினார்.
நீதியரசர் திரு.எஸ்.ராஜேஸ்வரன் அவர்கள் திருமதி. பத்மினி பட்டாபிராமன் எழுதிய “கடல் கோழிகள் “ என்ற நூலையும் வெளியிட்டார்.
ராணி வார இதழ் ஆசிரியர் திருமதி. மீனாட்சி முதல் பிரதிபெற்று தனது மதிப்புரையில் இந்த நூலாசிரியர் பத்மினி பற்பல சிறுகதைகளில் நிறைய TWISTS தந்துள்ளார் என்றும் Corona காலத்தில் அனைவருக்கும் ஏற்பட்ட துன்பங்களை சிறுகதைகளில் வலியுறத்தியுள்ளார் என்றார்.
நீதியரசர் திரு. எஸ்.ராஜேஸ்வரன் இரண்டு நூல்களின் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கியதோடு அவற்றில் உள்ள சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார். “கடல்கோழிகள் ” என்ற சிறுகதைத்தொகுப்பில் உள்ள கதைகள் பற்பலரின் மனத்தாங்கலுக்கு விடை காணலாம் என்றார். உரத்தசிந்தனை அமைப்பு இன்று நடத்திய அரங்கத்தில் வந்திருந்த அனைவரும் அற்புதமான நல்ல மனிதர்கள் என்று கூறி சிறப்புரை ஆற்றினார்.
நிறைவாக திருமதி.பத்மினி பட்டாபிராமன் ஏற்புரையுடன் நன்றியுரை வழங்கிச் சிறப்பித்தார்.
ஜே.வி. கேட்டரிங் திரு.அப்பு நிகழ்ச்சியில் பங்குகொண்ட அனைவருக்கும் சுவையான உணவு தந்து உபசரித்தார்.