மறந்துபோன மரபு விளையாட்டுகள் | லதா சரவணன்
பகுதி – 1
வெயிலோடு விளையாடு
விளையாட்டு சொல் மொழியிலும் செயல் மொழியிலும் நம்மைக் கட்டிப்போடுபவை 20ம் நூற்றாண்டில் இந்த விளையாட்டில் அர்த்தங்கள் வேறாகிப் போனது இப்போது 21ம் நூற்றாண்டின் விளையாட்டு என்றால் அது நம் கையடக்க செல்போன்களில் ஒளிரும் கலர் வண்ணப் பந்துகளோ, அல்லது ஒரு மிகப்பெரிய கூட்டத்தினை எதிர்த்து போரிடும் வீரனின் சாகசமோ அல்லது ஏதாவது பூனையோ எலியோ ஓடுவதுதான் இப்போதைய விளையாட்டு, ஆனால் இதன் இலக்கு என்ன நேரவிரயம் அப்போது நாம் சாலைகளிலோ மைதானங்களிலோ விளையாடும் போது நேரம் விரயம் ஏற்படுவது இல்லையா என்று நீங்கள் கேள்விகளை எழுப்பலாம்,
ஆனால் அதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை நாம் உணர்கிறோமோ, நேரத்தை இழந்து நாம் விளையாடும் போது நமக்குள் கிடைத்த சந்தோஷமும் ஆனந்தமும் நமக்கு கிடைக்கிறதே நம் உடலில் இருந்து வெளியேறும் வியர்வைகளினால் கலோரிகள் குறைந்து ஆரோக்கியம் கிடைத்ததே, இன்று முன்பின் அறியாதவர்களின் ஆழமான நட்பை முகநூலிலும் வாட்ஸ்அப்பிலும் பயன்படுத்தும் நாம் இப்படியான மரபு விளையாட்டுகளின் மூலம் நேரடியான நண்பர்களைச் சந்தித்திருக்கிறோம் அவர்களின் மூலம் குடும்பங்களுக்குள் நல்ல உறவுகள் தழைத்திருக்கிறது. சூரியனின் ஒளி நம்மேல் பட்டிருக்கிறது. பத்து மணிவரையிலும் படுக்கையில் நோட்டிபிகேஷனில் ஒலி எங்கே கேட்கிறது என்று நம் காதுகளைக் கூர்மையாக்கி கொண்டு கடத்துகிறோம்.
அப்படியொரு விளையாட்டுகள் தான் நம்மை ஆக்கிரமித்து கொள்கிறது இதற்கென்று உழைக்கிறவர்களும் அதிகமே நீங்கள் தனுஷ் நடித்த அனேகன், சாருக்கான் நடித்த ராஒன் படம் இவையெல்லாமே இம்மாதிரி வீடியோ கேம் மற்றும் மொபைல் ஆப் கேம்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் மையத்தைச் சுற்றியிருக்கும். நாம் அனேகனுக்குள் நுழைவும் சென்ற முறை தயாரித்ததை விடவும் அதிகமான பொருட்செலவில் எல்லாரையும் கவரும் அளவிற்கு ஒரு செல்போன் விளையாட்டைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று நிறுவனத்தின் உரிமையாளர் முதலில் ஒரு மீட்டிங்கில் சொல்லுவார். மிகவும் டிப்ரஷனாகாமல் இருப்பதற்காக அந்த வேலையில் இருப்பவர்களுக்கு அடிக்கடி கவுன்சிலிங் கொடுக்கப்படும். அவர்களின் மூளை அதிகம் வேலைசெய்வதற்காக ஊக்கமருந்துகளும் கொடுக்கப்படும் இப்படிப்பட்ட செயல்களால் ஒரு பெண் அளவுக்கு அதிகமான கற்பனையில் நிழலை நிஜமாய் கொண்டு தன்னையே மாய்த்துக் கொள்வதைப் போல கதையோட்டம் இருக்கும்.
விளையாட்டுகளைப் பற்றி பேசப்போகிறாம் என்று சொல்லிவிட்டு ஒருபடத்தின் முன்னோட்டம் எதற்கு என்று புருவம் உயர்த்துபவர்களுக்கு ஒரு விளக்கம் என்னவென்றால், இன்றைய சினிமாவின் தாக்கம் நம்மில் அதிகம் நம்மை நசுக்கும் விஷயங்களும் சரி நாம் பாதிக்கப்படுகிறோம் என்பது சரி சினிமாவும், அதன் கதாநாயகர்களும்தான் உணர்த்துகிறார்கள் அப்படியிருக்கும் போது, அப்போது அதனில் இருந்துதானே நாம் உவமைகளை எடுக்கவேண்டும். அப்படிப்பட்ட விளையாட்டுக்களை உருவாக்குபவர்களுக்கு மனநிலை பிறழ்கிறது என்றால், அதை விளையாடுபவர்களுக்கு சப்வே சபர், டெம்பிள் ரன், ஏஞ்சலினா பப்ஜி இன்னும் எத்தனையோ விளையாட்டுக்கள் இன்று குழந்தைகள், பெரியவர்கள் என்று குறிவைத்து தன் வசம் இழுக்கிறது.
அது ஒரு சைக்கலாஜிக்கல் சென்டர் அங்கே ஒரு 30வயது மதிக்கத்தக்க ஒரு பிரபலமான நிறுவனத்தின் மேலாளர் கவுன்சிலிங்கிற்கு வருகிறார். ஓய்வு நேரங்களில் விளையாட்டாக ஆரம்பித்த அந்த மொபைல் விளையாட்டால் என் வேலையை சரிவர பார்க்க முடியவில்லை, இன்னும் ஒரு லெவல் முடிக்கவேண்டும் என் நண்பர்களை அந்த விளையாட்டில் முந்த வேண்டும் என்ற எண்ணமே என்னை கட்டிப்போட்டு விளையாடச் சொல்கிறது இதனால் எனக்கு கண்களில் குறைபாடும், தொழில் கவனக்குறைவும் ஏற்பட்டு உள்ளது என்று அப்படி விளையாடாமல் இருக்கலாம் என்றால் என் வாழ்வில் எதையோ இழந்ததைப் போல உணர்க்கிறேன் என்று சொன்னார். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் 80களில் தன் காதலை இழந்த தருணத்தில் சினிமா கதாநாயகர்கள் சொல்லியது ஆனால் அந்த ஆறு இன்ஞ் ஒளித்திரை நம் விரல்களை மட்டுமல்ல நம்மையும் நம் சிந்தனைகளையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு ஆரோக்கியத்தையும், மனஉளைச்சலையும் நமக்கு பரிசாய்த் தருகிறது.
நம்மால மறந்து போன விளையாட்டுகளை நாம் நினைவில் கொண்டு வரவேண்டும். தமிழரின் வீர விளையாட்டுகள், ஒருகையில் மொபைல் போனோ அல்லது ப்ளேஸ்டேஷனின் ஜாய்ஸ்டிக்கோ எடுத்துக்கொண்டு மறுகையில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுவகைகளை உண்ணும் பழக்கத்தை மாற்ற அது ஒன்றே வழி.
நாம் நோயில்லா எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமெனில் நம் பராம்பரியத்தை வரலாற்று விளையாட்டுகளை, மறைந்து போன நிமிடங்களை அந்த விளையாட்டுகளின் சுகத்தை நம் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும். அதற்கு இந்த கட்டுரையின் அடுத்த பக்கங்களில் இரண்டு கேரக்டர்கள் அறிமுகப்படுத்தப்பட போகிறார்கள். அவர்களின் பெயர் வாசுவும், மாலினியும் ………..அவர்கள் நம் இழந்த சொர்க்கங்களைப் பற்றி கலந்துரையாடப்போகிறார்கள்.
(-தொடரும்…)
அடுத்தபகுதி – 2