தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71 ஆவது பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி காலை 8 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். காலை 8.30 மணிக்கு சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். காலை 9 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை யொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் திமுக தொண்டர்கள் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...