ரோஜா இதழ்களை வைத்து அசத்தலான 5 டிப்ஸ்..!

ரோஜா இதழ்களை வைத்து அசத்தலான 5 டிப்ஸ்..!

         ரோஜா இதழ்களை நாம் சருமத்திற்கு பயன்படுத்துவதினால் சருமத்திற்கு நாள் முழுவதும் பொலிவினை கொடுக்கும், சருமம் மென்மையாக காணப்படும். ரோஜா இதழ்களை வைத்து செய்யக்கூடிய 5 வகை அழகு குறிப்பு டிப்ஸ் பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.

Paneer rose beauty tips in tamil: 1

ஒரு பவுலில் பன்னீர் ரோஜா இதழ்களை சுத்தமாக கழுவி எடுத்து கொள்ளுங்கள். பின்பு அதனை மிக்சி ஜாரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மைபோல் அரைத்து கொள்ளுங்கள்.

பின்பு அந்த பேஸ்ட்டை சுத்தமான பவுலில் ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும். அதன் பிறகு அதனுடன் ஒரு ஸ்பூன் காய்ச்சாத பசும் பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை முகத்தை நன்றாக கழுவிய பின்பு அப்ளை செய்யுங்கள். பின்பு 10 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருங்கள்.

பின்பு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்துவர, சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் காணப்படும்.

Paneer rose beauty tips in tamil: 2

முகப்பருக்கள் மறைய ஒரு பவுலில் அரைத்த ரோஜா இதழ்களை ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள். பின்பு அதனுடன் ஒரு ஸ்பூன் தயிரை கலந்து கொள்ளவும்.

இந்த பேக்கை முகத்தை நன்றாக கழுவிவிட்டு அதன்பிறகு அப்ளை செய்யுங்கள். பின்பு 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருங்கள்.

அதன் பிறகு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும் இவ்வாறு செய்வதினால் சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் அனைத்தும் மறைந்து விடும். இந்த முறையை தினமும் செய்து வரலாம்.

Paneer rose beauty tips in tamil: 3

ஒரு வடிகட்டியை எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் ஒரு ஸ்பூன் அரைத்த ரோஜா இதழ்களை ஒரு ஸ்பூன் எடுத்து வடிகட்டி ஒரு சுத்தமான பவுலில் எடுத்து கொள்ளவும். அதன் பிறகு அவற்றில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை உங்கள் உதட்டில் நன்றாக அப்ளை செய்யுங்கள். இவ்வாறு அப்ளை செய்வதினால் உதடு பிங் நிறமாக மாறும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வரலாம்.

Paneer rose beauty tips in tamil: 4

சூரிய கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகள் மறைய. ஒரு சுத்தமான பவுலில் ஒரு ஸ்பூன் அரைத்த ரோஸ் இதழ்களை எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின்பு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும் இவ்வாறு தினமும் செய்து வர சருமம் பளபளப்பாக காணப்படும்.

aneer rose beauty tips in tamil: 5

சருமம் பொலிவுடன் இருக்க, மேலும் சருமத்தில் உள்ள கருவளையம் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி சருமம் என்றும் மென்மையாகவும், அழகாகவும் மாற இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க போதும்.

அதாவது ஒரு கிளீன் பவுலை எடுத்து கொள்ளவும் அவற்றில் ஒரு ஸ்பூன் அரைத்த ரோஜா இதழ்களை எடுத்து கொள்ளவும்.

பின்பு அதனுடன் ஒரு வைட்டமின் ஈ மாத்திரையை பிழிந்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தை நன்றாக கழுவி விட்டு அதன் பிறகு முகத்தில் அப்ளை செய்யுங்கள்.

இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர முகம் மென்மையாகவும், பொலிவுடனும், அழகாக காணப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!