போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் – மக்கள் அவதி | சதீஸ்

 போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் – மக்கள் அவதி | சதீஸ்

தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கிய நிலையில், பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தின. அடுத்தடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்த நிலையில், ஜனவரி 9-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

இதையடுத்து நேற்று(ஜன.8) மீண்டும் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் வழக்கமான அளவில் இயக்கப்படவில்லை. இந்த வேலைநிறுத்தத்தால், வெளியூர்களுக்கு குறைவான எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளதால், பேருந்து சேவை பெருமளவு பாதிக்கப்படும் என்ற அச்சம் பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...